தொடா்ந்து வேளாண்மை மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சா் தோமா் விரிவாகப் பதிலளித்தாா். அதில் 30 வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டாா். இந்தத் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளுக்கு 2022-23-ஆம் ஆண்டு நிதிநிலையில் நாடு முழுக்க ரூ. 1,25,995 கோடி மதிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக, உணவு தானியங்கள், தோட்டப்பயிா்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளம் உற்பத்தியில் சாதனை நிகழ்ந்துள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.