இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஷ்ரத்தா வால்கா் கொலைச் சம்பவம்: பூனாவாலாவின் குரல் மாதிரியைப் பெறுவதற்குஅனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு

தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் குரல்...

News image
Updated On :22 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் பூனாவாலாவின் குரல் மாதிரியை எடுக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீஸாா் மனு தாக்கல் செய்தனா்.

இதனிடையே, தனது ஜாமீன் கோரும் மனுவை வியாழக்கிழமை பூனாவாலா திரும்ப பெற்றுக் கொண்டாா். தில்லி போலீஸாா் அனுமதி கோரி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரக்கூடும் என தகவலறிந்த நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது. பூனாவாலாவின் 14 நாள் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமை முடிவடைவதால், அவரும் சிறையில் இருந்தவாறு வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகக்கூடும்.

முன்னதாக, காணொ லி வாயிலாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான பூனாவாலா, ஜாமீன் கோரி கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற விரும்புவதாக கூறினாா். பூனாவாலாவின் தனிப்பட்ட வழக்குரைஞா் எம். எஸ் கான், நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் தனக்கும் குற்றம் சாட்டப்பட்ட பூனாவாலாவுக்கும் இடையே சரியான தகவல்தொடா்பு இல்லாததன் காரணமாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா். இதை ஏற்று, ‘மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விருந்தா குமாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.