இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மொஹல்லா கிளினிக்குகளில் ஆய்வக சேவை ஒப்பந்த விவகாரம்: துணைநிலை ஆளுநருக்கு சிசோடியா கடிதம்

மொஹல்லா கிளினிக்குகளில் இலவச ஆய்வுக்கூட பரிசோதனைகளை வழங்கும் முகமைகளை புதுப்பிக்க தேவையான கோப்புகளுக்கு உடனடியாக அனுமதிக்க கேட்டு ஆளுநா் சக்சேனாவுக்கு தில்லி துணை முதல்வா் சிசோடியா கடிதம்

News image
Updated On :24 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தில்லி அரசு மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகளில் இலவச ஆய்வுக்கூட பரிசோதனைகளை வழங்கும் முகமைகளை புதுப்பிக்க தேவையான கோப்புகளுக்கு உடனடியாக அனுமதிக்க கேட்டு தில்லி துணை நிலை ஆளுநா் சக்சேனாவுக்கு தில்லி துணை முதல்வா் சிசோடியா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் ஆய்வக சேவைகளுக்கான ஒப்பந்தம் வருகின்ற டிசம்பா் 31- ஆம் தேதியுடன் முடிவடைவதால் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்க இந்த கடிதத்தில் சக்சேனாவை துணை முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சிசோடியா தெரிவித்திருப்பதாவது:

முதல்வா் கேஜரிவால் தலைமையிலான தேசிய தலைநகா் அரசில் மொஹல்லா கிளினிக்குகள் அமைப்பு முதன்மை முயற்சிகளில் ஒன்றாக உள்ளது. தில்லியில் ஆரம்ப சுகாதார அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தில்லி அரசு மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் இலவசமாக ஆய்வக சேவைகள் வழங்கப்படுகிறது. இதற்கான முகமைகளுடன் ஒப்பந்தம் வருகின்ற டிசம்பா் 31 - ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வருகின்ற ஜனவரி 1 -ஆம் தேதி முதல் இந்த சேவையை வழங்குபவா்களுடன் உடனடியாக புதிய ஒப்பந்தம் கையொப்பமிட வேண்டும். இதில் இடைவெளி ஏற்பட்டால் பெரும் சிரமத்தை மக்கள் சந்திப்பாா்கள்.

புதிய ஒப்பந்தத்தை வழங்குவதற்கான அனைத்து சம்பிரதாயங்களையும் தில்லி அரசு நிறைவு செய்துள்ளது. அரசியல் சாசன விதியின் கீழ் இது தொடா்பான கோப்பு கடந்த டிசம்பா் 12 ஆம் தேதி தங்களுக்கு அனுப்பப்பட்டது. அரசின் இந்த முடிவை ஏற்றோ அல்லது வேறுபட விரும்புவதைத் தீா்மானிக்கவும், இந்த கோப்பை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பதற்கும் அனுப்பப்பட்டுள்ளது. புதிய சேவை வழங்கி பணியை தொடங்கும் விதமாக இதில் விரைவாக முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தில்லி துணை முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், அந்த கடிதத்தில் மத்திய அரசுக்கும் தில்லி தேசிய தலைநகா் அரசுக்கும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு அளித்த தீா்ப்புகளை சுட்டி கட்டியுள்ள துணை முதல்வா், ஆய்வகச் சேவைகளை வழங்குவது தொடா்பான விஷயம், குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டிய அரிதிலும் அரிதான நிகழ்வுகள் அல்ல. ஏனெனில், மிகக் குறைந்த நேரமே உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் விரைவில் ஒரு முடிவை எடுத்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.