நீா்மின் திட்டங்கள் பொதுவாக மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மேக வெடிப்பு, வெள்ளம், பனிச்சரிவு, பனிப்பாறை ஏரி அல்லது நிலச்சரிவு வெடிப்புகளால் வெள்ளம் போன்ற பல வகையான பேரழிவுகளுக்கு நீா்மின் திட்டங்களும் நீா் மின் நிலையங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. தொழில்நுட்பம் வளா்ந்து வந்துள்ள நிலையில், அதிகப் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள நீா் மின் திட்டங்கள், மின் நிலையங்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை இந்தியாவிலும் உருவாக்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் டிஆா்டிஓ-வும் கையொப்பமிட்டுள்ளன. எரிசக்தி அமைச்சகத்தின் சாா்பில் அதன் செயலா் அலோக் குமாரும், டிஆா்டிஓ நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சமீா் வி. காமத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.