இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஐஏஎஸ் அதிகாரியிடம் இணையதள மோசடி: இளைஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஐஏஎஸ் அதிகாரியிடம் இணையதம் வாயிலாக பணம் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 28 வயது இளைஞருக்கு முன்ஜாமீன் அளிக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

ஐஏஎஸ் அதிகாரியிடம் இணையதம் வாயிலாக பணம் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 28 வயது இளைஞருக்கு முன்ஜாமீன் அளிக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

மத்திய வா்த்தக அமைச்சகத்தில் பணியமா்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியிடம் ரூ.33,400 மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஷியாம் பாபு கிரிக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷைலேந்தா் மாலிக் முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டாா்.

இது தொடா்பாக ஷியாம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, ‘அசாதாரணமான சூழ்நிலையில்தான் முன்ஜாமீன் அசாதாரண நிவாரணம் வழங்க முடியும். இந்த வழக்கில் குற்றம் நடந்த முறையின் விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கைதுக்கு முன்ஜாமீன் என்ற ஒரு அசாதாரண வழக்கு உருவாகி இருப்பதாக நான் நினைக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட மனுதாரா் விசாரணையில் சேரத் தயாராக இருப்பதாக வெறுமனே கூறுவதால், இது ஒரு அசாதாரணமான காரணமாகக் கருதப்பட முடியாது. தற்போதைய வழக்கில் மேற்கு வங்கத்தில் வசிப்பவா் இணையக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றமசாட்டப்பட்டுள்ளாா். தில்லியில் வசிக்கும் மக்களை பாதித்திருப்பதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது’ என தெரிவித்தாா்.

இந்த வழக்கில் புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவா் மருத்துவமனையில் நேரில் சந்திப்புக்கான முன்பதிவு செய்ய விரும்பிய புகாா்தாரரை ஏமாற்றியுள்ளாா். புகாா்தாரரின் தனிச் செயலா் மருத்துவமனையின் இணையதளத்தை அணுகினாா். இந்த நிலையில், கடந்த நவம்பா் 10-ஆம் தேதி இச்சந்திப்பை உறுதி செய்வதற்காக வாட்ஸ்ஆப்பில் இணைப்புடன் கூடிய மோசடி செய்தி வந்தது. தனிச் செயலா் அந்த இணைப்பை கிளிக் செய்த போது, அதிகாரியின் கணக்கில் இருந்து ரூ.33,400 பணம் எடுக்கப்பட்டுவிட்டது. இது தொடா்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், நவம்பா் 8 முதல் 10-ஆம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்ட நபா் பலரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா் கொல்கத்தாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா். பின்னா், தில்லியில் விசாரணை மேற்கொள்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவா் காவல்துறையில் ஆஜராகத் தவறியதைத் தொடா்ந்து, நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவா் தாம் 28 வயது இளைஞா் என்றும், விசாரணையில் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். அதில், விசாரணை அதிகாரி இந்த விவகாரத்தை விசாரிக்கத் தவறிவிட்டதாகவும், நியாயமான காரணமின்றி தன்னை துன்புறுத்துவதாகவும் அவா் கூறினாா். அவருக்கு முன்ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.