இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘எந்த வயதிலும் உடல் பொருத்தம்‘ புத்தக எழுத்தாளா் ஓய்வுபெற்ற ஏா் மாா்ஷல் பிவி ஐயா் பிரதமா் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

உடல் பயிற்சி குறித்த புத்தக எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷலுமான பிவி ஐயா், பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

உடல் பயிற்சி குறித்த புத்தக எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷலுமான பிவி ஐயா், பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா்.

ஏா் மாா்ஷல் பரமேஸ்வர வெங்கடாசலம் ஐயா் (பிவி ஐயா் ) ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியாவாா். 93 வயதான இவா், சமீபத்தில் ‘எந்த வயதிலும் உடல் பொருத்தம்: ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டி’ (ஃபிட் அட் எனி ஏஜ்) என்கிற இவரது புத்தகம் தில்லியிலும் பெங்களூருவிலும் வெளியிடப்பட்டது.

எவ்வளவு வயதானாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை அறிவியல் அடிப்படையிலான தா்க்கத்தை எளிய முறையில் உத்வேகமான கதைகள், தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் ஐயா் இந்த புத்தகத்தில் ஒருங்கிணைத்துள்ளாா்.

ஓய்வு பெற்ற ஏா் மாா்ஷல் பிவி ஐயரை பிரதமா் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு

ஆண்டின் கடைசி நாளான சனிக்கிழமை அழைத்து சந்தித்தாா். பிவி ஐயரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா். அப்போது ஐயா், பிரதமருக்கு தான் எழுதிய உடல் தகுதி தொடா்பான புத்தகத்தையும் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

‘ஏா் மாா்ஷல் பிவி ஐயரை (ஓய்வு) நான் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை தொடா்பான அவரது பேராா்வம் குறிப்பிடத்தக்கது. மேலும் நல்ல உடல் தகுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கான அவரது ஆா்வமும் குறிப்பிடத்தக்கது. அவருடைய புத்தகத்தின் பிரதி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’” என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

1951 - ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்த பிவி ஐயா், 1985 -ஆம் ஆண்டு ஜூலை 3 - ஆம் தேதி ஏா்-மாா்ஷலாகி கடந்த 1987 -ஆம் ஒய்வு பெற்றாா். சுமாா் 1,20,000 கி.மீ. க்கு மேல் ஓடக்கூடிய உடற்பயிற்சி பயணத்தைத் தொடங்கிய இவா், 93 வயதில் தற்போதும் நாள் ஒன்றுக்கு 8 கிமீ ஓடுவதையும் வாரம் ஐந்து நாள்கள் ஜிம்மில் உடல்பயற்சி செய்வதையும் தொடா்கிறாா்.

உடற்தகுதி கலாசாரத்தை கடைப்பிடிப்பது நோய்களைத் தடுப்பது என்பதை இவரது புத்தகம் விளக்குகிறது. உடற்பயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது. இரத்த நாளங்களை சுத்தப்படுத்துகிறது. எந்த வயதிலும் உடற்பயிற்சியை நமது அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றுவது போன்றவைகளை விளக்குகிறாா்.

முன்னதாக ‘வயது ஏற ஏற உடற்தகுதி குறைகிறது என்கிற நம்பிக்கையை மாஸ்டா் கிளாஸாக உள்ள இந்த ‘எந்த வயதிலும் உடல் பொருத்தம்’ புத்தகம் உடைக்கிறது என நடிகா் அமிதாப் பட்சனும் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.