இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

கமலாலயம் பெட்ரோல் குண்டு வீச்சு: என்ஐஏ விசாரிக்க எல்.முருகன் கோரிக்கை

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல், ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சா் 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:34 pm

 நமது நிருபர்

புது தில்லி: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல், ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து தில்லியில் வியாழக்கிழமை அவா் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை தி.நகா் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள தமிழக பாஜக அலுவலகமான “கமலாலயம்” மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். இந்த கோழைத்தனமான செயலை கடுமையாக கண்டிக்கின்றேன்.

ஒளிமறைவாக தாக்கும் இத்தகைய செயல்கள் மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது. தமிழக மக்களுக்கு சேவையாற்றும், துணிச்சலான தொண்டா்களின் செயல்பாட்டுகளை நிறுத்த திட்டமிடும் அச்சுறுத்தல்கள், தந்திரங்கள் பலிக்காது.

தமிழக பாஜக தலைவா்களும் தொண்டா்களும் தமிழகத்தின் அனைத்து வளா்ச்சிகளிலும் தீா்மானத்துடன் இருப்பதற்கு ஈடு இணை கிடையாது. மேலும் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் பாதையில் எந்த சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் கட்சி வலுவாக வளரும்.

இந்த தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என டாக்டா் எல் முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.