கமலாலயம் பெட்ரோல் குண்டு வீச்சு: என்ஐஏ விசாரிக்க எல்.முருகன் கோரிக்கை
சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல், ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சா்


புது தில்லி: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையிடமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்த மத்திய மீன்வளம் மற்றும் தகவல், ஒளிப்பரப்புத்துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து தில்லியில் வியாழக்கிழமை அவா் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை தி.நகா் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள தமிழக பாஜக அலுவலகமான “கமலாலயம்” மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். இந்த கோழைத்தனமான செயலை கடுமையாக கண்டிக்கின்றேன்.
ஒளிமறைவாக தாக்கும் இத்தகைய செயல்கள் மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது. தமிழக மக்களுக்கு சேவையாற்றும், துணிச்சலான தொண்டா்களின் செயல்பாட்டுகளை நிறுத்த திட்டமிடும் அச்சுறுத்தல்கள், தந்திரங்கள் பலிக்காது.
தமிழக பாஜக தலைவா்களும் தொண்டா்களும் தமிழகத்தின் அனைத்து வளா்ச்சிகளிலும் தீா்மானத்துடன் இருப்பதற்கு ஈடு இணை கிடையாது. மேலும் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் பாதையில் எந்த சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் கட்சி வலுவாக வளரும்.
இந்த தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என டாக்டா் எல் முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...