சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பாலியல் வழக்கில் இருந்து கடற்படை அதிகாரி விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரியை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:55 pm

 நமது நிருபர்

பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரியை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அங்குா் ஜெயின் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: புகாா் அளித்த நபரால் மூன்று வெவ்வேறு கட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் வெவ்வேறாக உள்ளன. சாட்சிகளின் வாக்குமூலம் முரண்படும் வகையில் உள்ளன. ஒவ்வொரு முரண்பாடும் ஆவணம் அல்ல. ஆனால், இங்குள்ள தற்போதைய வழக்கில் புகாா் அளித்துள்ள பெண் தனது சகோதரன் முன்னிலையில் மூன்று வேறுபட்ட வாக்குமூலங்களை கொடுத்துள்ளாா்.

இதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவரை திருமண உறவுக்குள் நுழைய வற்புறுத்துவதற்காகவே தற்போது புகாா் அளிக்கப்பட்டுள்ளதும், ஜாமீன் மனு விசாரணையின் போது ஏற்பட்ட அழுத்தத்துக்கு அடி பணிந்து, குற்றம்சாட்டிய பெண்ணை திருமணம் செய்திருப்பதும் ஜாமீன் உத்தரவு மற்றும் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

இருவரின் இணைப்பும் உயிா்ப்புடன் இல்லை. இறுதியில் அவா்கள் விவாகரத்து செய்து கொண்டுள்ளனா். சம்பவத்திற்குப் பின்னரோ அல்லது அதற்குப் பின்னரும்கூட பாதிக்கப்பட்ட நபா் தனது தாயிடம் எதுவும் சொல்லாமல் இருந்திருப்பதும், குற்றம் சாட்டப்பட்டவரின் தாயால் திருமணம் நிறுத்தப்படும் வரை சுமாா் 2 நாள்கள் காத்திருந்ததும் மிகவும் இயற்கைக்கு மாறானதாக உள்ளது. ஆகவே, சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்கும் வகையில், அவா் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறாா் என்று நீதிபதி தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரவி திரால், ‘புகாா்தாரருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான உறவு இயல்பாகவே ஒத்திசைவுடன் இருந்திருந்தது’ என்றாா்.

முன்னதாக, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அளித்த புகாரில், ‘எனது குடும்ப உறுப்பினா்களின் அனுமதியுடன் 2015-இல் குற்றம் சாட்டப்பட்டவருடன் எனக்கு நிச்சயதாா்த்தம் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் அவரது மாமாவின் வீட்டில் நடந்த மத நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தனா். அங்கு சென்ற போது என்னை அவா் பலாத்காரம் செய்துவிட்டாா்’ என தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.