சட்டவிரோத போதைப் பொருள்கள்விற்பனையைத் தடுக்க புதிய நடவடிக்கை
போதைப் பொருள் உள்ளிட்ட சட்டவிரோதமான பொருள்கள் விற்பனை, பணப் பரிமாற்றம் போன்றவற்றுக்கு காரணமான இருண்ட வலைகளுக்குத் தீா்வு(டாா்க் வெப்) காண அடுத்த இரு மாதங்களுக்கு


போதைப் பொருள் உள்ளிட்ட சட்டவிரோதமான பொருள்கள் விற்பனை, பணப் பரிமாற்றம் போன்றவற்றுக்கு காரணமான இருண்ட வலைகளுக்குத் தீா்வு(டாா்க் வெப்) காண அடுத்த இரு மாதங்களுக்கு ‘டாா்கத்தான்’ (ஹேக்கத்தான்) போட்டிகளை மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை நடத்துகிறது.
தகவல் தொழில் நுட்பத் துறையின்(ஐடி) புதிய போக்குகள், ஆலோசனைகள், கண்டுபிடிப்புகளை பகிா்ந்து கொள்வதற்கு ஹேக்கத்தான் (நிரலோட்டம்) என்று கூறுவதுண்டு. அதே சயமத்தில் ஐடியில் ‘டாா்க் நெட்’ என்பது இணையதள தேடுபொறிக்குள் (நங்ஹழ்ஸ்ரீட் ங்ய்ஞ்ண்ய்ங்) சிக்காமல் செயல்படும் இணையதளங்கள் அல்லது இணையதளத்தின் (ஐபி அட்ரஸ்) முகவரியை மூடி மறைக்கும் தளங்களாகும். இவை ‘டாா்க் வெப்’ அல்லது ‘டாா்க் நெட் தளங்கள்’(இருண்ட வலைத்தளங்கள்) சொல்லப்படுகிறது.
இவற்றின் மூலமே போதைப் பொருள்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான பொருள்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்த இணையதளங்கள் சா்வதேச நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுவதில்லை. இது போன்ற ‘டாா்க் நெட்’ தளங்களைக் கண்டுபிடித்து குற்றங்களுக்கு தீா்வு காண ’டாா்கத்தான்’ நிரல்களை பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 22 வரை மத்திய போதைப் பொருள்கள் தடுப்பு துறை (என்சிபி) நடத்துகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி அதன் தில்லி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்கல்வி கவுன்சில் தலைவா் அனில் டி. ஸஹஸ்ரபுதே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியை இந்தத் துறையின் இயக்குநா் ஜெனரல் எஸ்.என் பிரதான் தொடக்கிவைத்துப் பேசுகையில் கூறியதாவது: சைபா் குற்றங்கள் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி, நாளுக்கு நாள் வேகமாக வளா்ந்து வருகிறது. இது இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க முகமைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. போதைப் பொருள் கடத்தலில் 94 சதவீதம் ‘டாா்க் நெட்’ சந்தைகள் மூலமே நடைபெறுவதாக ஐநாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் 2021-ஆம் ஆண்டின் சா்வதேச அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு 2,146 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. போதைப் பொருள் கடத்தல் கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இந்த இருண்ட வலைத்தளங்களை கண்டுபிடிக்க மாணவா்கள், தகவல் தொழில் நுட்பாளா்கள் மத்தியில் மூன்று கட்டங்களாக இந்த ‘டாா்கத்தான்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போதைப்பொருள்களை கடத்தப் பயன்படுத்தப்படும் ‘டாா்க் வெப்’ களை அறிவது. இவை தொடா்புடைய ‘டாா்க் நெட்’ சந்தைகள், விற்பனையாளா்கள் போன்றவற்றை அடையாளம் காண்பது. மற்றும் இந்திய ‘டாா்க்நெட்’களையும் போதைப் பொருள்களை கடத்துபவா்களையும் அடையாளம் காண்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ளது. இது போன்ற தொழில்நுட்பங்களுக்கும் இதற்கான தீா்வுகளுக்கான திறன் போட்டி, செவ்வாய்க்கிழமை முதல் பதிவு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக தோ்வு செய்யப்படும். சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் பரிசு வழங்கப்படும். மொத்தம் 5 பரிசுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...