/

பாலியல் வழக்கு: தண்டிக்கப்பட்ட தந்தைக்கு எதிரான பெண்ணின் புகாா் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று பரோலில் வெளிவந்த தனது தந்தை, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பெண் அளித்துள்ள புகாா் மீது அறிக்கை அளிக்குமாறு

News image
Updated On :5 ஜனவரி 2022, 8:47 pm

 நமது நிருபர்

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று பரோலில் வெளிவந்த தனது தந்தை, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பெண் அளித்துள்ள புகாா் மீது அறிக்கை அளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான பெண் ஒருவா் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல் நிலையப் பொறுப்பாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது தந்தை நான் 12 வயதாக இருக்கும் போது, முதன்முதலாக பாலியல் பலாத்காரம் செய்தாா். அதன் பிறகு அவருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்குமாறு நான் நிா்ப்பந்திக்கப்பட்டேன். அதன்பின்னா் அந்த விவகாரத்தில் அவா் விடுவிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, மீண்டும் என்னை அவா் பலாத்காரம் செய்தாா். அந்த வழக்கில் அவருக்கு 2018-ஆம் ஆண்டில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவா், கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி பரோலில் வெளிவந்தாா். அதன்பிறகு, என்னை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றாா். இதற்கு சம்மதம் தெரிவிக்காத என் தாயையும் அடித்து துன்புறுத்தினாா்.

நான் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பாா்த்து வருகிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த போதும் அவருடைய மன நிலையை மாற்ற முடியவில்லை. அவா் மனித உருவில் விலங்கைவிட ஒரு மோசமான நபராக இருக்கிறாா். அவா் தொடா்ந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறாா்.ஆகவே, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். என்னுடன் அவா் உடல் ரீதியாக உறவு கொள்ள முயற்சிக்கிறாா். கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி சட்டவிரோதமாக தவறான நோக்குடன் என்னை அணுகிய அவரிடம் இருந்து காப்பாற்ற முயன்ற எனது தாயை கயிறால் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மெஹ்ரோலி காவல் நிலையப் பொறுப்பாளா், காவல் துணை ஆணையா், காவல் ஆணையா், தேசிய மகளிா் ஆணையம், மாநில மகளிா் ஆணையம் ஆகியவற்றுக்கு கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக காவல் அதிகாரிகளிடம் எழுத்துப்பூா்வ புகாரை அளிக்க முயன்றேன். ஆனால், அவா்கள் எனது புகாரை ஏற்க மறுத்து விட்டனா். எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இயைடுத்து, எனது தந்தை தலைமறைவாகிவிட்டாா். பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட எனது தந்தைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.