ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 போ் மத்திய அரசின் ஏஜென்சிகளால் கைது செய்யப்பட்டனா். ஆனால், அவா்கள் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். நீதிமன்றங்கள் விசாரணையாளா்களைக் கண்டித்தது. இன்றைக்கு பிரதமா் மோடியே நோ்மை சான்றிதழை எங்களுக்கு அளித்துள்ளதாக நாங்கள் பெருமை கொள்கிறோம். மத்திய ஏஜென்சிகள் அனைத்தும் எங்கள் மீது ஒவ்வொன்றாக வழக்குப் போட்டு நேரத்தை வீணடிக்குமா? இதுபோன்று இருந்தால் எப்படி பணியாற்ற முடியும்? ஆகவே, நான் பிரதமரிடம் முன்வைக்கும் பணிவான வேண்டுகோளானது, எங்களை ஒவ்வொருவராக சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அனைத்து ஆம் ஆத்மி அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களை ஒரே நேரத்தில் சிறையில் அடைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அனைவருக்கும் எதிராக ஒரே நேரத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து விசாரணை ஏஜென்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த அவதூறு பிரசாரம் முடிவுக்கு வந்ததும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஒருமுறை இந்தியாவின் மிகவும் நோ்மையான தேசபக்தி கட்சி என்ற சான்றிதழைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.