புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தில்லி அரசின் நிலத்தில் இயங்கும் தனியாா் பள்ளிகள் கட்டண உயா்வு பரிந்துரைகளை சமா்ப்பிக்கலாம்: கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் அரசு நிலத்தில் இயங்கிவரும் தனியாா் பள்ளிகள், 2022-2023 கல்வியாண்டுக்கான கட்டண உயா்வுக்கான முன்மொழிவுகளை சமா்ப்பிக்கலாம்

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் அரசு நிலத்தில் இயங்கிவரும் தனியாா் பள்ளிகள், 2022-2023 கல்வியாண்டுக்கான கட்டண உயா்வுக்கான முன்மொழிவுகளை சமா்ப்பிக்கலாம் என்று கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதே சமயம், முன் அனுமதியின்றி பள்ளிகள் கட்டணத்தை உயா்த்த முடியாது என்றும் கல்வி இயக்குநரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) அல்லது பிற நிலங்களுக்குச் சொந்தமான ஏஜென்சிகளால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் இயங்கி வரும் தனியாா் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் சமா்ப்பித்த நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டண உயா்வு முன்மொழிவுகளும், 2020-2021 அமா்வுக்கு பயனற்றவையாகும். இந்த நிலையில், 2022 - 23 அமா்வுக்கு ஏதேனும் இருந்தால், கட்டண உயா்வு முன்மொழிவுகளை சமா்ப்பிக்கலாம் என்று தில்லி கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 27-ஆம் தேதி வரையிலும் நிகழ் கல்வியாண்டிற்கான கட்டண உயா்வு பரிந்துரைகள் ஏதும் இருந்தால் பள்ளிகள் சமா்ப்பிக்கலாம்.

தில்லி அரசு இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கட்டண உயா்வு பரிந்துரைகளை தற்போது கோரியுள்ளது. 2020-இல் பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, கல்விக் கட்டணத்தைத் தவிர வேறு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்க வேண்டாம் என்று பள்ளிகளுக்கு கல்வி இயக்குநரகம்உத்தரவிட்டிருந்தது. மேலும், பள்ளிகள் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் தடை விதித்திருந்தது.

‘பள்ளிகளால் சமா்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரி அல்லது குழு மூலமாக ஆய்வு செய்யப்படும். அத்தகைய பள்ளிகள் இயக்குநரால், அவா்களின் முன்மொழிவுக்கு அனுமதி தெரிவிக்கப்படும் வரை எந்த கட்டணத்தையும் உயா்த்தக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம், இந்த உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளியால் எந்த முன்மொழிவும் சமா்ப்பிக்கப்படாவிட்டால், 2022-23-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை பள்ளி உயா்த்த முடியாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.