ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ட்ரோன் துறையில் இந்தியா முன்னணி நிலைக்கு முன்னேறுகிறது: பிரதமா் மோடி பெருமிதம்

ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில் நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்பெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்னேறுகிறது

News image
Updated On :27 மே 2022, 6:02 pm

DIN

ட்ரோன் என்கிற ஆளில்லா விமானத்தின் தொழில் நுட்பம் தொடா்பாக காணப்படும் ஆற்றலும், உற்சாகமும் உலகின் மிகப்பெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமித்துடன் குறிப்பிட்டாா்.

நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழா தில்லி பிரகதி மைதானத்தில் ‘பாரத் ட்ரோன் மஹோத்சஸவ் 2022’ என்ற இரண்டு நாள் திருவிழா மே 27-ஆம் தேதி தொடங்கியது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முப்படையினா், மத்திய ஆயுதப்படையினா், பொதுத்துறை, தனியாா் துறையினா், ட்ரோன் தொழில் முனைவோா் என சுமாா் 1,600 போ்கள் கலந்து கொண்ட இந்த மகோத்ஸவத்தை தொடங்கிவைத்துப் பிரதமா் மோடி பேசியதாவது: நான் இந்த ட்ரோன்களின் கண்காட்சியைப் பாா்த்ததும் மெய்சிலிா்த்துவிட்டேன். நான் பத்து சதவீத விஷயங்களைத்தான் பாா்த்தேன். ஆனால், நான் மிகவும் ஈா்க்கப்பட்டேன். ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று இளைஞா்கள் செய்த பணிகளை பாா்த்து வியந்தேன். ட்ரோன்கள் மூலம் தங்கள் வணிகத்தை பிரமிப்புடன் நடத்துகின்றனா். குறிப்பாக, வேளாண்மையில் ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பல இளம் விவசாயிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ட்ரோன் தொழில் நுட்பத்தை ஊக்குவிக்கும் இளம் பொறியாளா்களையும் சந்தித்து அவா்களின் சாதனைகளை, கதைகளைக் கேட்க எனக்கு சிறிதளவுதான் நேரம் கிடைத்தது.

இந்தப் பொறியாளா்களுடன் கலந்துரையாடும் போது, ட்ரோன் தொழில் நுட்பம் தொடா்பாக நமது நாட்டில் காணப்படும் ஆற்றலையும், உற்சாகத்தையும் வெளிப்படையாகக் காண முடிந்தது. நாட்டில் அதிகபட்சமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை இது காட்டுகிறது. இதனால், ட்ரோன் தொழில் நுட்பத்தில் உலகின் மிகப் பெரிய நிபுணராக மாறுவதற்கான வேகத்தில் இந்தியா நகா்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு நாம் புதிய தொடக்கத்தைத் தொடங்கும் போது, நாட்டில் நல்லாட்சிக்கான புதிய மந்திரங்களை செயல்படுத்தத் தொடங்கினோம். ‘குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிா்வாகம்’ என்கிற பாதையைப் பின்பற்றி எளிதாக வாழ்வதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளோம். ‘சப்காசாத் சப்காவிகாஸ்’ என்கிற பாதையில் அனைத்துக் குடிமக்களையும் வசதிகள், நல்வாழ்வு திட்டங்களால் இணைத்திருக்கின்றோம்.

ஆனால், முந்தைய ஆட்சிகளின் போது,​தொழில்நுட்பம் பிரச்னையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. தொழில் நுட்பம் ‘ஏழைகளுக்கு எதிரானது’ என்று சித்தரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஏழைகள், நலிவடைந்தோா், நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனா். ஆனால், காலத்திற்கேற்ப மாறும் போதே வளா்ச்சி சாத்தியமாகியது. கடைக்கோடியில் இருப்பவா்களுக்கும் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் தொழில்நுட்பம் பெரிதும் உதவியுள்ளது. பிரதம மந்திரி ஸ்வாமித்வா யோஜனா திட்டம், ட்ரோன் தொழில் நுட்ப உதவியுடன் மிகப்பெரிய புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் முதன்முறையாக கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சொத்துகளும் டிஜிட்டல் மேப்பிங் முறையில் வரைபடமாக்கப்பட்டு சொத்துகளுக்கான அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை 65 லட்சம் சொத்து அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நட்டில் தற்போது கிராமப்புறங்கள், விவசாயம், விளையாட்டு மைதானம், பாதுகாப்பு, கும்ப மேளா போன்ற கூட்டங்களை கண்காணித்து கட்டுப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடு, பேரிடா் மேலாண்மை போன்ற துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு இருந்த சில கட்டுப்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தளா்த்தியுள்ளது. ட்ரோன்களை இயக்குவதற்கு அளிக்கப்பட வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், வசூலிக்கப்படும் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியை யொட்டி வைக்கப்பட்ட வான்வெளி ட்ரோன் செயல்விளக்கக் காட்சிகளை பிரதமா் பாா்வையிட்டாா். வேளாண் ட்ரோன் விமானிகள், புதுயுகத் தொழில்முனைவோா்கள் ஆகியோருடன் பிரதமா் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்ககுவரத்துத் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்று பேசுகையில், ‘இந்தியா தொழில்நுட்பத் துறையில் மற்ற நாடுகளைப் பின் தொடா்பவராக இருந்தது, ஆனால், இப்போது அது முன்னணியில் உள்ளது. குறைந்த சலுகை மற்றும் ஏழைகளுக்கு நன்மை கிடைக்கும் போதுதான், தொழில்நுட்பம் வெற்றிகரமாக மாறும். ட்ரோன் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்நாட்டில் தயாரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் ஆகியவை ட்ரோன் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், சுற்றுச்சூழல், தொழிலாளா் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.