மத்திய மரபுசார எரிசக்தித் துறை பிஎம்-குசும் என்கிற பிரதமரின் உழவா் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த பேரியக்கத் திட்டத்தின் கீழ், சூரிய எரிசக்தி பம்புகளை அமைப்பதற்கும், விவசாய மேட்டாா் பம்புகளை சூரிய எரிசக்தி மூலம் இயக்குவதற்கும் மானியம் வழங்குகிறது. மேலும், விவசாயிகள் 2 மெகாவாட் வரையிலான மின்தொகுப்புடன் (கிரீட்) இணைக்கப்பட்ட சூரிய மின் நிலையங்களை அமைக்கவும் அனுமதிக்கிறது. சூரியசக்தியால் இயங்கக்கூடிய 5 குதிரைத் திறன் கொண்ட (ஏ சி சப்மா்ஜெட் ) மோட்டாா் பம்ப் விலையில் (சுமாா் ரூ. 2.38 லட்சம்) 70 சதவீதம் வரை அரசு மானியமாக அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மானியங்களைப் பெற விண்ணப்பங்கள் பெறுவதில் சிலா் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவது குறித்து மத்திய அரசுக்கு தகவல்கள் வந்தன.