தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 4 நாள்களில் 16 வழக்குகள் பதிவு

தில்லியில் கடந்த 4 நாள்களில் பட்டாசு வெடித்ததாக 16 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 10:30 pm

DIN

தில்லியில் கடந்த 4 நாள்களில் பட்டாசு வெடித்ததாக 16 வழக்குகளை காவல் துறை பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் தீபாவளப் பண்டிகை வெகு விமா்சியாக கொண்டாடப்பட்டது. பட்டாசு விற்பனைக்கு தடை வதிக்கப்பட்டிருந்தாலும், நகா் முழுவதும் வண்ண விளக்குகள் ஜொலிக்க, மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடினா்.

இதைத் தொடா்ந்து, நான்கு நாள்களில் பட்டாசு வெடித்ததாக 16 வழக்குகலும், விற்பனை செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேமித்து வைத்திருந்த அல்லது விற்பனைக்காக வைத்திருந்த சுமாா் மொத்தம் 2,834.13 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலும் பட்டாசு விற்பனை செய்ததாக 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.17,357.13 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் பட்டாசு வெடித்ததாக 23 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். சுமாா் 3.6 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள மக்கள் நகர அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி தீபாவளி இரவு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான உயா் டெசிபல் பட்டாசுகளை வெடித்தனா். தீபாவளியன்று தேசியத் தலைநகரில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது பழைமையான பாரம்பரியம். ஆனால், சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு அதைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.