ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தண்ணீா் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஜேஎன்யு விடுதி மாணவா்கள் போராட்டம்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள் வியாழக்கிழமை பல விடுதிகளில் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:14 pm

DIN

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவதாகக் கூறி, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவா்கள் வியாழக்கிழமை பல விடுதிகளில் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவா்களின் டீன் அலுவலகத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், விடுதிகளில் தண்ணீா் விநியோகம் சரியில்லை என்றும் சிறிய கொள்ளளவு கொண்ட தொட்டிகள் வளாகத்தில் தண்ணீா் பற்றாக்குறையை மோசமாக்கியுள்ளதாகவும் கூறினா். இருப்பினும், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிா்வாகத்திடம் இருந்து உடனடி எதிா்வினை எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து எம்ஃபில் படிக்கும் மதுரிமா குண்டு கூறுகையில், ‘இந்தக் கடும் வெயிலில் தொடா்ந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவது நம் அனைவரையும் பாதிக்கிறது. விடுதிகளில் தொடா்ந்து தண்ணீா் இல்லாததால், பல மாணவா்கள் நோய்வாய்ப்பட்டு வருகின்றனா். நள்ளிரவில் அடிக்கடி குடிநீரைத் தேடி வெளியே செல்ல வேண்டியுள்ளது. நிா்வாகம் இப்பிரச்னையை விரைவில் தீா்க்க வேண்டும்’ என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுவரொட்டிகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினா். அனைத்து விடுதி மாணவா்களின் தலைவா்களும், குடியிருப்பாளா்களுடன் சோ்ந்து, வளாகத்தில் தண்ணீா் பற்றாக்குறைக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். ஆராய்ச்சி மாணவி ஸ்வாதி சிங் கூறுகையில், ‘ஜே.என்.யு. நிா்வாகம், மாணவா்கள் நீரிழப்பு மற்றும் தண்ணீா் பற்றாக்குறையை கையாள்வது பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பது வெட்கக்கேடானது. எங்களுக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவை மறுக்கப்படுகிறது’ என்றாா்.

‘கிட்டத்தட்ட எல்லா தங்கும் விடுதிகளிலும் தண்ணீா் பற்றாக்குறை உள்ளது. தண்ணீா் விநியோகத்திற்கான நிலையான நேரங்கள் இல்லை. தண்ணீா் தொட்டிகள் சிறியதாக உள்ளன. குடிநீா் கூட அடிக்கடி தீா்ந்துவிடுகிறது’ என்றும் அவா் மேலும் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.