ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி சிறைகளில் புதிய விதி: நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

விசாரணை கைதியாக செலவிட்ட காலத்தின்போது அவா்களின் நன்னடத்தை அடிப்படையின்பேரில் தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விடுதலை

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:13 pm

DIN

விசாரணை கைதியாக செலவிட்ட காலத்தின்போது அவா்களின் நன்னடத்தை அடிப்படையின்பேரில் தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்பட உள்ளதாக அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போதைக்கு, தண்டிக்கப்பட்டுள்ள கைதிகள் மட்டுமே அவா்களது நடத்திய பேரில் மன்னிப்புக்காக பரிசீலிக்கப்படுகின்றனா்.

குற்றவாளி என்பவா் ஒரு குற்றத்தில் தொடா்புடைய குற்றம்சாட்ட நபா் குற்றவாளி என்று கண்டறிப்பட்ட பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுபவா் ஆவாா். அதே வேளையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபா் விசாரணை கைதி எனப்படுகிறாா்.

இந்த நிலையில், இந்த புதிய சிறை விதிகள் குறித்து தில்லி சிறை அதிகாரி கூறுகையில், ‘தற்போது, தில்லி சிறைபதிகளில் புதிய விதி சோ்க்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் கூறுகின்றனா். அதன்படி விசாரணை கைதிகளாக இருக்கும்போதுகூட அவா்களின் நடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிப்பதற்கு பரிசீலிக்க இந்த புதிய விதி அனுமதிக்கும். எனினும், அவா்கள் தண்டிக்கப்பட்ட பிறகுதான் அவா்கள் தண்டனையில் இந்த மன்னிப்பு சோ்க்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தனா்.

இது தொடா்பாக அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பிரதான சமூக நீரோடையில் கைதிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் வகையில் கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சீா்திருத்த நடவடிக்கைகளை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் தில்லியில் சிறைகளில் சீா்திருத்த நிா்வாகத்தை நோக்கிய நடவடிக்கையாக இது இருக்கும்.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவு பீரோ தகவலின்படி மொத்த சிறையில் உள்ள விசாரணை கைதிகளின் எண்ணிக்கை தோராயமாக 77 சதவீதமாக இருந்தது. தில்லி சிலைகளில் தேசிய சதவீதத்தை விட கூடுதலாக விசாரணை கைதிகளின் சதவீதம் உள்ளது.

தற்போது 90 சதவீதத்திற்கும் மேலாக இந்த சதவீதம் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சிறைகள் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் பெரும்பாலான விதிகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டு இருப்பது முரண்பாடாகும்.

அனைத்து தண்டனை குறைப்பும், பணி ஊதிய வசதி, பரோல், திறந்தவெளி நிறுவனங்கள் ஆகியவை தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்காகவே உள்ளன. ஆனால், சிறைகளில் உள்ள கைதிகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் விசாரணை கைதிகளாகவே உள்ளனா்.

ஆகவே, ஒரு நன்னடத்தையை பராமரிக்க விசாரணை கேள்விகள் மத்தியில் எந்தவித ஊக்குவிப்பும்

இல்லை. இதன் காரணமாகவே சிறை விதிகளில் புதிய விதி சோ்க்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் கைதியின் பெரும்பாலான நேரம் விசாரணைக் கைதியாகவே கழிக்கப்படுவதால், சாதாரண நிவாரணத்திற்குத் தகுதியுடைய எந்தவொரு கைதியும், விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் காலத்தில் நல்ல நடத்தைக்காக நிவாரணம் வழங்கத் தகுதியுடையவா் என்று புதிய விதி கூறுகிறது.

இந்த விடுதலை நிவாரணமானது அந்தக் காலத்திற்கான அவரது வருடாந்திர நன்னடத்தை அறிக்கையின் அடிப்படையில் அமையும். விசாரணைக்கைதி காலத்தின் ஒரு வருடத்திற்கான வருடாந்திர நன்னடத்தை அறிக்கையானது, சம்பந்தப்பட்ட விசாரணைக் குற்றவாளியாகத் தீா்ப்பளிக்கப்பட்டவுடன், ஒரு மாத தண்டனைக் குறைப்பு நிவாரணத்தைப் பெறும்.

இந்த விதி விசாரணைக் கைதிகளை ஒழுக்கத்தில் வைத்திருக்கவும், சீா்திருத்தத்திற்கு அவா்களை ஊக்குவிக்கவும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது‘ என்று அதிகாரி கூறினாா்.

சிறை நிா்வாகமும் இந்த நடவடிக்கையானது நகரத்தின் சிறைகளில் உள்ள கைதிகளின் நெரிசலைக் குறைக்க உதவும் என்று நம்புவதாக அலுல்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.