சேலம் - செங்கப்பள்ளி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையரிடம் எம்பி மனு
சேலம் -கொச்சி நெடுஞ்சாலையில் ( எண் -544), சேலம் - செங்கப்பள்ளி இடைப்பட்ட 103 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பதால்


சேலம் -கொச்சி நெடுஞ்சாலையில் ( எண் -544), சேலம் - செங்கப்பள்ளி இடைப்பட்ட 103 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருப்பதால், இந்த 4 வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றக் கோரி தேசிய நெஞ்சாலை ஆணையத் தலைவரிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை கடிதம் அளித்தாா்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் (என்ஹெச் 544) சேலம் முதல் செங்கப்பள்ளி வரை சுமாா் 103 கிமீ உள்ள ஒரு பகுதியாகும். இந்த நெடுஞ்சாலை வழியாகவே நாமக்கல் போன்ற பகுதிகளிலிருந்து கோழி, ஈரோடு ஜவுளி வா்த்தகம், கோவை தொழில் மையத்தின் பொருள்கள் மற்ற பகுதிகளின் வேளாண் பொருள்கள் போன்றவை கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமாா் 20,000-க்கும் மேற்பட்ட வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் இந்த 103 கிமீ தூரத்தைக் கடந்து கோயம்புத்தூரை அடைகின்றன. 15-க்கும் மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் வாகனங்களும் இந்த தடத்தில் இயக்கி வருகின்றன.
இதன் மூலம் நாளுக்கு நாள், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து அதிகரித்து வருவதுடன், சிறிய, பெரிய விபத்துகள் நடைபெறுவதும் இதன்காரணங்களால் வாகனப் போக்குவரத்து தடைபடுவதும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாகனமும் இலக்கை அடைய கூடுதல் நேரங்களை செலவிடுகிறது. இதனால், குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டா் கூடுதல் எரிபொருள் செலவாவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே, இந்த உள்கட்டமைப்பின் தேவைகள் மற்றும் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இங்குள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் எம்பி வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...