மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சி இரட்டை முனைகள் கொண்ட ஆயுதமாக மாறியுள்ளது என மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழி பேசினார்.
"இந்தியா' கூட்டணிக் கட்சிகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை பேசியதாவது: மணிப்பூர் மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி இருப்பதால் இரட்டை என்ஜின் ஆட்சி என்று பெருமையுடன் கூறினர். ஆனால், இந்த இரட்டை என்ஜின் மணிப்பூர் மக்களுக்கு எதிராக இரட்டை முனைகள் கொண்ட ஆயுதமாக மாறியுள்ளது. இது இரட்டைப் பேரழிவு, இரட்டை முறிவு என்றுதான் கூறவேண்டும். அது எந்த அளவு என்றால் நாட்டில் முதன்முறையாக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க நீதித் துறை தலையிடும் அளவு.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "இரண்டு சகோதரர்கள் சண்டையிடுகிறார்கள், அரசு ஒரு தந்தையாக இருந்து மத்தியஸ்தம் செய்கிறது' என்கிறார் அந்த மாநில முதல்வர். இது அவமானம் இல்லையா? அங்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. கூடுதலாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், மக்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது. புதிய நாடாளுமன்றத்துக்கு செங்கோலைக் கொண்டு வந்து பெரிய ஆடம்பர நிகழ்ச்சியை நடத்தினீர்கள். சோழர் மரபு என்று சொன்னீர்கள். நீங்கள் சிலப்பதிகாரத்தைப் படித்து பாண்டியன் செங்கோல் கதையையும் அறிய வேண்டும் என்றார் கனிமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு: யாருக்கு சாதகம்?, யாருக்கு பாதகம்?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


