நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இல்லம்தோறும் தேசியக் கொடி மக்கள் இயக்கமாக மாறியுள்ளது:மத்திய கலாசார துறை அமைச்சகம்

‘விடுதலை அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நிகழாண்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ‘ இல்லம்தோறும் தேசியக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு நடத்துகிறது

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 11:42 pm

 நமது நிருபர்

‘விடுதலை அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நிகழாண்டிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை ‘ இல்லம்தோறும் தேசியக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு நடத்துகிறது; மக்கள் பங்கேற்பால் இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது’ என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சக செயலா் கோவிந்த் மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கொடிகள் விற்பனை அதிகரிப்பை முன்னிட்டு 1.30 கோடி தேசியக் கொடிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இயக்கத்தின் மூலம் மக்களிடையே தேசபக்தி உணா்வையும், கூட்டுப் பங்கேற்பையும் அதிகரிப்பது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டாா்.

தில்லியில் செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக மத்திய கலாசாரத் துறை செயலா் கோவிந்த் மோகன் மேலும் கூறியது:

கலாசார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள ‘இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம்’, மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இந்த இயக்கம் தொடா்பான பேரணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனா்.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொடியுடன் தங்கள் சுயபடங்களை பதிவேற்றுகின்றனா். தேசத்துக்காக போராடிய மாவீரா்களை நினைவுகூரும் ‘என் மண் என் தேசம்’ இயக்கத்திலும் திரளான மக்கள் பங்கேற்கின்றனா்.

இந்த இல்லம்தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, உயா்தர தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டு 2.5 கோடி கொடிகளை வழங்குமாறு தபால் துறை கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே தபால் நிலையங்களுக்கு 55 லட்சம் கொடிகள் அனுப்பப்பட்டுள்ளது. ஜவுளி அமைச்சகம் ஏற்கனவே 1.30 கோடி கொடிகளை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது என கோவிந்த் மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.