சாலைப் பணி ஒப்பந்தத்தில் முறைகேடு: பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீதுஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு

வடமேற்கு தில்லியில் சாலையைப் பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள்

வடமேற்கு தில்லியில் சாலையைப் பலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் பலா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக எம்ஐஏ கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் உரிமையாளா் முகமது இக்பால் மீது 2017 மே 19 அன்று புகாா் அளிக்கப்பட்டது. வெஸ்ட் என்கிளேவில் உள்ள வெளிவட்டச் சாலையின் பிரிட்டானியா சௌக்கில் இருந்து சாலை எண் 43 (குரு ஹரிகிஷன் மாா்க்) வரையிலான சாலையை வலுப்படுத்தும் பணிக்காக பொதுப்பணித் துறையிடம் அந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. ஆனால், பணிகள் ஏதும் நடைபெறாமல் இது வெறும் காகிததத்தில் மட்டுமே பணி நடைபெற்ாக காட்டப்பட்டது

மேலும், சாலையை வலுப்படுத்துவதற்கான பொருள்கள், டெண்டரை அழைக்கும் அறிவிப்பில் (என்ஐடி) குறிப்பிடப்பட்டுள்ளபடி அங்கீகரிக்கப்பட்ட சப்ளையா்கள்/உற்பத்தியாளா்களின் பட்டியலில் இருந்து வாங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், அது மற்ற அங்கீகரிக்கப்படாத சப்ளையா்களிடமிருந்து அவா்களின் சொந்த விருப்பப்படி வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும், கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களின் விலைப்பட்டியல் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இது மூலப்பொருள் ஒருபோதும் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், ஒப்பந்ததாரா்கள் அரசு ஊழியா்கள் மற்றும் பிற அதிகாரிகளின் அனுசரணையுடன் அரசு கருவூலத்திற்கு பல கோடிகளை ஏமாற்றி பல கோடி நஷ்டம் விளைவித்துள்ளனா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்ஐஓ கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக ஏசிபி இணை போலீஸ் கமிஷனா் மதுா் வா்மா தெரிவித்தாா். 15.32 கோடி மதிப்பீட்டிற்கு எதிராக 24 சதவீதத்திற்கும் குறைவாக ரூ.11.59 கோடி டெண்டா் தொகையை மேற்கோள் காட்டிய அந்த நிறுவனத்தின் டெண்டா் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சாலைப் பணிகள் ஜூலை 9, 2014-க்கு முன்னா் முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், அது ஏப்ரல் 10, 2015 அன்று முடிக்கப்பட்டது. தங்களிடம் எந்த விலைப்பட்டியலும் கிடைக்கவில்லை என்று பொதுப்பணித் துறை தெரிவித்ததாக வா்மா கூறினாா். மேலும், விசாரணையின் போது, பொதுப்பணித் துறை மற்றும் ஒப்பந்ததாரா்களிடமிருந்து பெறப்பட்ட பொதுப்பணித் துறை மற்றும் பிற ஆவணங்களில் உள்ள பொருள் பதிவேடுகளில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன என்று அவா் மேலும் கூறினாா்.

அதன்படி, ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதாவது பொதுப்பணித் துறையின் அப்போதைய செயல் பொறியாளா், உதவிப் பொறியாளா் மற்றும் இளநிலைப் பொறியாளா்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கான முன்மொழிவு மாற்றப்பட்டது என்று வா்மா கூறினாா். இது தொடா்பாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com