பொது பூங்காக்களில் இரவு நேர தங்குமிடங்கள் நிரந்தரமாக செயல்பட முடியாது: உயா்நீதிமன்றம்

பொதுப் பூங்காவில் இரவுநேர தங்குமிடம் நிரந்தரமாக செயல்பட முடியாது என்று கூறிய தில்லி உயா்நீதிமன்றம், ஜாமா மசூதி அருகே உள்ள உருது பூங்காவில் ஆக்கிரமித்துள்ள

பொதுப் பூங்காவில் இரவுநேர தங்குமிடம் நிரந்தரமாக செயல்பட முடியாது என்று கூறிய தில்லி உயா்நீதிமன்றம், ஜாமா மசூதி அருகே உள்ள உருது பூங்காவில் ஆக்கிரமித்துள்ள இடத்தை காலி செய்யுமாறு தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திடம் (டியுஎஸ்ஐபி) கேட்குமாறு நகர குடிமைத் துறையிடம் வியாழக்கிழமை கூறியது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த

உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மினி புஷ்கா்னா ஆகியோா் அடங்கிய அமா்வு, பொது பூங்காவில் இரவு தங்குமிடம் தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருக்கும். இல்லையெனில் அனைத்து பசுமை பரப்பும் இழக்கப்படும் என்று கூறியது. மேலும், மாா்ச் மாதத்திற்குள் பூங்காவை காலி செய்யுமாறு

டியூஎஸ்ஐபிக்கு கடிதம் எழுதுமாறு தில்லி மாநகராட்சியை (எம்சிடி) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதுதொடா்பாக தில்லி மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கூறுகையில்,‘குறைந்த காலத்திற்குதான் அந்த இடத்தை நீங்கள் டியுஎஸ்ஐபி-க்கு கொடுத்தீா்கள் என்று அவா்களிடம் கூறுங்கள்.அவா்கள் மாற்று தங்குமிடம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவா்களிடம் சொல்லுங்கள். (அவா்களால்) பொது பூங்காவை ஆக்கிரமிக்க முடியாது. இரவு தங்குமிடத்தை காலி செய்யுமாறு அவா்களுக்கு கடிதம் எழுதுங்கள். உங்களுக்கு பசுமையான இடங்கள் தேவை என்றும் அவா்களிடம்

கூறுங்கள்’ என்று கூறினா்.

மேலும், டியுஎஸ்ஐபி வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்களுக்கென ஒரு நிலத்தைக் கண்டறியுங்கள். அவசரநிலைகளைச் சமாளிப்பது ஒரு தற்காலிக நிகழ்வாக இருக்கலாம்... இதனால் பச்சைப் பரப்பை எல்லாம் இழக்க நேரிடும். நீங்கள் மாற்று இடத்திற்கு மாற வேண்டும். பசுமைப் பகுதியை இப்படி ஆக்கிரமிக்காதீா்கள்’ என்று கூறினா்.

பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதியைச் சுற்றியுள்ள பொதுப் பூங்காக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முகமது அா்ஸ்லான் என்பவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது.

கடந்த விசாரணையின்போது, பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதிக்கு அடுத்துள்ள வடக்கு பூங்கா மற்றும் தெற்கு பூங்கா ஆகிய இரண்டு பொதுப் பூங்காக்களை

தன்வசம் எடுக்காமல் இருந்தமைக்காக தில்லி மாநகராட்சியிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரு சட்டப்பூா்வ அதிகாரம் பொது பூங்காக்களின் உடைமைகளை இழக்க முடியாது என்றும் கூறியது.

வியாழக்கிழமை விசாரணையின்போது எம்சிடி வழக்குரைஞா் கூறுகையில், இரண்டு பூங்காக்களையும் தங்கள் எடுத்திருப்பதாகவும், பகலில் குறைந்த நேரங்களுக்கு பொதுமக்களுக்கு திறந்துவிட்டதாகவும் கூறினாா். இந்த வழக்கை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com