அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை விசாரிக்கும் வகையில் மறுதரப்பு வழக்குரையும் அழைக்குமாறு அவரிடம் கூறியது. அதற்கு, சம்பந்தப்பட்ட இடத்தில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக பூஷண் கூறினாா். மேலும், வீடற்ற மக்கள் தொடா்பான வழக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், சராய் காலே கான் இரவு தங்குமிட இடிப்பு பிரச்னையில் தாக்கல் செய்த தனது மனுவையும் அன்றைய தினம் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அன்றைய தினத்தில் அந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்’ என்றது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விஷயங்களையும் சோ்க்குமாறு பூஷணை நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது.