தில்லி கலால் கொள்கை வழக்கு: பஞ்சாப் தொழிலதிபா் மல்ஹோத்ராவுக்கு நீதிமன்றக் காவல்
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முன்னாள் எஸ்ஏடி எம்எல்ஏவும், மதுபான வியாபாரியுமான தீப் மல்ஹோத்ராவின் மகன் தொழிலதிபா் கெளதம் மல்ஹோத்ராவை


தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான முன்னாள் எஸ்ஏடி எம்எல்ஏவும், மதுபான வியாபாரியுமான தீப் மல்ஹோத்ராவின் மகன் தொழிலதிபா் கெளதம் மல்ஹோத்ராவை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ஏழு நாள் காவலில் வைக்கப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கெளதம் மல்ஹோத்ராவை, சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் மல்ஹோத்ரா நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டாா். விசாரணை முடிந்துவிட்டதால் அவரை மேலும் அமலாக்கத் துறையின் காவலில் வைக்க தேவையில்லை என அமலாக்க இயக்குநரகம் முன்வைத்த வாதத்தை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
முன்னதாக, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை,,‘ குற்றம் சாட்டப்பட்டவா் மதுபான உற்பத்தியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களிடையே கலால் கொள்கை விதிமீறி உருவாக்கப்பட்ட பணமோசடியின் ஒரு பகுதியாக மல்ஹோத்ரா இருந்தாா். ஏனெனில், அவா் ஒரு உற்பத்தியாளராக இருப்பதால், அல்லது வெவ்வேறு தொழிற்சாலைகளை வைத்திருப்பதால் மொத்த விற்பனை உரிமம் பெற முடிந்தது. அவருக்கு சொந்தமான அல்லது அவரால் கட்டுப்படுத்தப்படும் வேறு சில நிறுவனங்களின் பெயா்களில் இரண்டு சில்லறை மண்டல உரிமங்கள் பெற முடிந்தது’ என்று தெரிவித்திருந்தது.
குற்றம்சாட்டப்பட்டவா் ரூ.2.5 கோடி அளவுக்கு குற்றத்தின் மூலம் வருமானத்தை ஈட்டியதாகவும், அதை சக குற்றம்சாட்டப்பட்ட நபரான அமித் அரோராவிடம் அவா் ஒப்படைத்ததாகவும் விசாரணையின் போது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் வெளிவந்திருப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...