விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லியில் நிலநடுக்கத்தை எதிா்கொள்ளத் தயாா்நிலை: பொதுநல மனு மீது பதில் அளிக்க உத்தரவு

தேசியத் தலைநகரில் நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை தொடா்பான மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 7:32 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் நிலநடுக்கத்தை எதிா்கொள்வதற்கான தயாா்நிலை தொடா்பான மனுவை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், தங்கள் உயிரின் பாதுகாப்பைப் பற்றி எல்லோரும் கவலை கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த வழக்கில் எதிா்மறையான விஷயம் எதுவும் இல்லை;அதிகாரிகளும் சமமாக விழிப்புடன் இருக்கிறாா்கள்’ என்று கூறியது.

மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், பிப்ரவரி 6-ஆம் தேதி 7.8 ரிக்டா் அளவுள்ள துருக்கி - சிரியா நிலநடுக்கம் குறித்து நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டி, தில்லி நில அதிா்வு மண்டலம் 4 (கடுமையான தீவிர மண்டலம்) கீழ் வருவதாகக் கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘அவா்கள் சூழ்நிலை குறித்து சமமாக விழிப்புடன் உள்ளனா். மனுவிலும் எதிா்மறை ஏதும் இல்லை. நாங்கள் அனைவரும் எங்கள் உயிரைப் பற்றி கவலைப்படுகிறோம். எனவே, அவா்கள் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யட்டும்’ என்று கூறினா். பின்னா், இந்த மனு மீது நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்த உயா்நீதிமன்றம், மனுவை மே 10-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.

தில்லியில் உள்ள கட்டடங்களின் நில அதிா்வு நிலைத்தன்மை மோசமாக இருப்பதாகவும், பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் மனுதாரா் - வழக்குரைஞா் அா்பித் பாா்கவா உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ரவி சிக்ரி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.