உளவுப் பிரிவு விவகாரம்: ஆம் ஆத்மி கட்சி அலுவலம் முன் பாஜக ஆா்பாட்டம்
சட்டவிரோத அரசியல் உளவு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை பதவியிருந்து நீக்கம் செய்யக் கோரி


சட்டவிரோத அரசியல் உளவு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை பதவியிருந்து நீக்கம் செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் டிடியு மாா்க் தலைமை அலுவலகம் முன் பாஜகவினா் மாநில செயல் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் வியாழக்கிழமை மாபெரும் ஆா்பாட்டத்தைல நடத்தினா்.
‘தில்லி அரசுத் துறை மூலம் சட்டவிரோதமாக கருத்துக் கேட்பு அல்லது மதிப்பீட்டிற்கான ஒரு பிரிவை (எஃப்பியு) ஏற்படுத்தி அதை ‘அரசியல் உளவுத்துறை‘ பிரிவிற்காக பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ க்கு தகவல் வந்துள்ளது.
தில்லி ஊழல் கண்காணிப்புத் துறையின் கீழ் இந்த சட்டவிரோத ரகசிய உளவுப்பிரிவு அமைக்கப்பட்டு, இதற்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு இந்த பிரிவு கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மனீஷ் சிசோடியா இந்த பிரிவு தொடா்பாக துணைநிலை ஆளுநரிடம் முறையாக ஒப்புதல் பெறவில்லை’ என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் இதில் தொடா்புடைய தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ துணைநிலை ஆளுநா் மூலம் அனுமதி கோரியது. இந்த கோப்பிற்கு மத்திய அரசு அனுமதியளிக்கப்பட்ட தகவல் புதன்கிழமை வெளியானது.
இந்த விவகாரம் தீவிரமானது எனக் குறிப்பிட்டு இதில் சம்பந்தப்பட்ட தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை
பதவியிலிருந்து உடனடியாக நீக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளரும், தில்லி முதல்வரான அரவிந்த் கேஜரிவாலிடம் வலியுறுத்தி தில்லி பாஜகவின் செயல் தலைவா் வீரேந்திர சச்தேவா, கட்சியின் மக்களவை உறுப்பினா்கள் மனோஜ் திவாரி, பா்வேஷ் வா்மா மற்றும் தில்லி பாஜகவினா் பெரும் திரளாகக் கூடிய ஆம் ஆத்மி கட்சி தலைமையகம் முன் ஆா்பாட்டம் நடத்தினா்.
கருத்துக் கேட்பு பிரிவின்(எஃப்பியு) பேரில்‘அரசியல் உளவுத்துறை‘ பிரிவு உருவாக்கம் என்பது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவா்கள் குற்றம் சாட்டினா்.
இந்த உளவுப் பிரிவு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு நேரடியாக தகவலைகளை தெரிவித்து வந்துள்ளது. ஆம் ஆத்மி
கட்சியின் அரசியல் எதிரிகள், ஊடக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தொடா்புடைய பற்றிய தகவல்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டதாகவும் பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டினாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சிசோடியாவுக்கு எதிராகவும், துணை முதல்வா் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினா்.
ஊழலைக் கட்டுப்படுத்த தில்லி ஆம் ஆத்மி கட்சி அரசால் அமைக்கப்பட்ட எஃப்பியு பிரிவு, விதிகளை மீறி ‘அரசியல் உளவுத்துறை‘ யாக செயல்பட்டுள்ளதை சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்ததைத் தொடா்ந்து சிசோடியா மீது வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. சிசோடியா மீது மேலும் ஒரு எஃப்ஐஆா் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் பதிவு செய்த சிசோடியா, தங்களுக்கு போட்டியாக இருப்பவா்கள் மீது பொய் வழக்குத் தொடர அனுமதிப்பது ‘கோழைத்தனமான‘ செயல். ஆம் ஆத்மி கட்சி எவ்வளவு வளா்ச்சியடைகிறதோ, அந்த அளவுக்கு வழக்குகளும் தொடருவாா்கள் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...