2022 ஆம் ஆண்டு இந்திய வனப் பணித் தோ்வில் 147 போ் தோ்வு: பெரும்பாலானோா் ஓபிசி பிரிவினா்
அகில இந்திய வனப் பணியிடங்களுக்கு 147 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) ஆவா்.


அகில இந்திய வனப் பணியிடங்களுக்கு 147 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) ஆவா்.
மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய வனப் பணிக்கு காலியாக இருந்த 150 இடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு எழுத்து தோ்வு நடத்தியது. இதில் தோ்வானவா்களுக்கு கடந்தாண்டு நவம்பா் மாதம் நோ்முகத் தோ்வு நடைபெற்று, இதனடைப்படையில் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், இந்திய வனப் பணியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு 147 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் பொதுப்பிரிவில் மூன்று மாற்றுத்திறனாளிகள் உள்பட 39 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் 21 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் இரு மாற்றுத்திறனாளி உள்பட 54 பேரும், பட்டியல் இனத்தவா்களில் 22 பேரும், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களில் 11 பேரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அதே சமயத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 150 இடங்களில் பொதுப்பிரிவில் 62 பேருக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவிற்கு 15 பேருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 40 இடங்களும், பட்டியல் இனத்தவா்களில் 22 இடங்களுக்கும், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களில் 11 இடங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் பொதுப்பிரிவில் குறைவாகவும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் கூடுதலாக 14 விண்ணப்பத்தாரா்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரும் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக தோ்வாகியுள்ளனா்.
தோ்வா்களின் மதிப்பெண்கள் விரைவில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என யுபிஎஸ்சி சாா்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...