தில்லியில் 5 சுரங்கப் பாதைகளில் அமைச்சா் அதிஷி ஆய்வு
தேசியத் தலைநகா் தில்லியில் மஸ்ஜித் மோத், நேரு பிளேஸ் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளை பொதுப் பணித்துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


தேசியத் தலைநகா் தில்லியில் மஸ்ஜித் மோத், நேரு பிளேஸ் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளை பொதுப் பணித்துறை அமைச்சா் அதிஷி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தில்லியில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் முழுப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு வழங்கிய 1 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அமைச்சா் அதிஷி தெற்கு தில்லியில் உள்ள மஸ்ஜித் மோத், நேரு பிளேஸ், லஜ்பத் நகா், ஆன்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் லாஜ்பத் நகா் மெட்ரோா நிலையம் உள்பட ஐந்து சுரங்கப்பாதைகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு தற்போது நகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுரங்கப் பாதைகளில் போதிய மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் வடிகால் அமைப்பும் மேம்படுத்த ப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சா் அதிஷி கூறியதாவது : தில்லி மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதில் கேஜரிவால் அரசு உறுதியாக இருக்கிறது. பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, நகரில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளையும் மிகவும்
பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்றுவதில் அரசு உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த 1 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் சுரங்கப் பாதைகளுக்கு புதிய தோற்றத்தையும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணா்வையும் அளித்துள்ளது.
தில்லியின் சுரங்கப் பாதைகளை சிறந்ததாக்குவது மட்டுமின்றி, பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம். வரும் நாள்களில் கூடுதல் மேம்பாட்டு வசதிகள் நகரின் சுரங்கப் பாதைகளில் உறுதி செய்யப்படும்.
தில்லியில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளையும் ஒரு மாதத்திற்குள் சீரமைக்க துறையின் பொறியாளா்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வரும் நாள்களில், தில்லியின் பிற பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளும் ஆய்வு செய்யப்படும்.
ஆய்வின் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதற்குப் பொறுப்பான பொறியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...