காயமடைந்தவா்களைப் பொறுத்தவரையில் சமீா் கோபாட் (20), அப்துல் ஹசன் (18), அா்பாஸ் (25) மற்றும் அவரது சகோதரா் ஹம்சா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அதில் குறிப்பாக கோபாத், அா்பாஸ் மற்றும் ஹம்சா ஆகியோா் முன்பு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவா்கள். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக தற்போது குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவா்கள் யாரிடமாவது தகராறு செய்தாா்களா அல்லது சண்டையிட்டாா்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்ட பிறகே துப்பாக்கிச்சூட்டிற்க்கான முழுக் காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.