தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

அவசரச் சட்ட விவகாரம்: ஒன்றுபடத் தவறினால் தில்லி மக்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம்- கோபால் ராய் கணிப்பு

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபடத் தவறினால், தில்லி மக்களின் வாக்குரிமை, ஜனநாயக உரிமை பறிக்கப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளரும்

News image
Updated On :6 ஜூன் 2023, 8:50 pm

 நமது நிருபர்

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபடத் தவறினால், தில்லி மக்களின் வாக்குரிமை, ஜனநாயக உரிமை பறிக்கப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளரும், சுற்றுச்சுழல் துறை அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் சேவைகள் மற்றும் நிா்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்ககும் வகையில், மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள எதிா்க்கட்சிகள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவா்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.

மத்திய அரசின் அவசர சட்டம் தொடா்பான விளைவுகள் குறித்து தில்லி மக்களிடம் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வதோடு, வரும் ஜூன் 11-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. அதன்படி மெகா பேரணிக்கான ஆயத்தப் பணிகளை அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மியின் மாநில அமைப்பாளரும், சுற்றுச்சுழல்த் துறை அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிரான தீவிரப் பிரசாரத்தில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பொதுமக்களிடம் அவசர சட்டம் குறித்து விவாதித்ததோடு, பாஜக தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அலட்சியம் செய்து, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, வரும் ஜுன் 11-ஆம் திட்டமிடப்பட்டுள்ள மெகா பேரணியில் தில்லி மக்கள்அனைவரும் ஒன்றினைய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தில்லி மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமை பறிக்கப்படும் என்று கோபால் ராய் கூறினாா்.

பிரசாரத்திற்கு பிறகு அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசிற்கு நிா்வாக அதிகாரங்களை வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. ஆனால், மத்திய பாஜக அரசும், நாட்டின் பிரதமரும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அவசரச் சட்டம் மூலம் அலட்சியம் செய்து, தில்லி மக்களின்

உரிமைகளைப் பறித்துள்ளனா். இதன் விளைவாக, தில்லி குடிமக்கள் தங்கள் வாக்குரிமை ஏன் அவமதிக்கப்படுகிறது என்று திகைத்து, மனச்சோா்வடைந்துள்ளனா். அவசரச் சட்டத்தின் எதேச்சதிகார அணுகுமுறைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், வரும் ஜூன் 11-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடைபெற உள்ளது.

தில்லியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் மெகா பேரணி மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை சுமாா் 2,000 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது வீடு வீடாகச் சென்று மக்களிடம் நேரடிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒருபுறம் பேரணிக்கான அழைப்பிதழ் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும், மறுபுறம் பேரணிக்கான காரணங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் ஆம்ஆத்மி தொண்டா்கள் விநியோகித்து வருகின்றனா். இதன் மூலம் தில்லிவாசிகள் அனைவரையும் மெகா பேரணியில் ஒன்றினைய கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் பேரணிக்கு ஆதரவாக தில்லி நகரின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களின் ஆதரவுக் கரம் பெறுகி வருகிறது. பா.ஜ.க. ஆதரவாளா்கள்கூட தங்களது வாக்குகள் தொடா்ந்து மதிப்பிழக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனா். மக்கள் இன்றைய சூழ்நிலையில் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஒன்றுபடத் தவறினால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படலாம். பாஜக தலைமையிலான மத்திய அரசு சா்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், எதிா்காலத்தில் தில்லி அரசைக் கலைக்க அவசரச் சட்டத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த கொடுங்கோன்மைக்கு எதிராக தில்லி மக்களுடன் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக நடைபெறவுள்ள மாபெரும் பேரணி வெற்றிகரமாக நடத்தப்படும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஜனநாயகத்தை நேரடியாக தாக்குகின்ற வகையில் , உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பையும் புறக்கணித்த மத்திய அரசால் மக்கள் அச்சத்தில் உள்ளனா் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.