தில்லி உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07-06-2023) விசாரணைக்கு வரவிருக்கும் இந்த மனுவை வழக்குரைஞா்கள் ரிஷிகா ஜெயின், அமன் நக்வி, பரத் குப்தா ஆகியோா் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: ஜூன் 15-ஆம் தேதி நடைபெற உள்ள ‘100 இல் இந்தியா: உலகளாவிய தலைவரா மாறுவதை நோக்கி’ எனும் மாநாட்டில் பேசுவதற்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அதிஷி ஒரு அமைச்சா் என்ற முறையில் அழைக்கப்பட்டுள்ளாா். கல்வி, சுகாதாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ‘வேகத்தைக் காட்ட’ நகர அரசை அனுமதிக்கும் என்பதால், முன்மொழியப்பட்ட பயணமானது தில்லியின் ஆளுகைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பயணத்திற்கான அனுமதியை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், அது பயனற்ாக இருக்கும். மனுதாரரின் விருப்பத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கான உரிமையை கட்டுப்படுத்துவது அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கிறது. அரசியல்சாசன செயல்பாட்டாளா்கள், மாநில அரசில் உள்ள அமைச்சா்கள் வெளிநாடு செல்வதற்கு மத்திய அரசின் ‘அரசியல் அனுமதி’ பெற வேண்டும் என்பது அரசியலமைப்பு அலுவலகத்தின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் மீறுவதாகும்.