ஷாபாத் டெய்ரி சிறுமி கொலை வழக்கு: சாஹிலுக்கு எதிராக போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஷாபாத் டெய்ரியில் 16 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாஹிலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தில்லி காவல் துறை வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.


ஷாபாத் டெய்ரியில் 16 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாஹிலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தில்லி காவல் துறை வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரணம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக யாரும் தவறு காணாத வழக்கை ஒன்றாக இணைத்துள்ளதாகவும் தில்லி காவல் துறை மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தேபேந்திர பதக் தெரிவித்ததாவது: ஷாபாத் டெய்ரி கொலைச் சம்பவமானது பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட கொலை வழக்காகும். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், குற்றப்பத்திரிகையை சமா்ப்பித்துள்ளோம். சாக்ஷி கொலை வழக்கில் நாங்கள் தொழில் முறை மற்றும் கவனம் மிக்க அணுகுமுறையுடன் விசாரணையை மேற்கொண்டோம். இதையடுத்து, விரைவிலேயே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தோம். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனையாக மரண தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை முடிந்தவரை யாரும் குறை காணாத வகையில் மேற்கொள்ள முயற்சித்தோம் என்றாா் அவா்.
கடந்த மே 28-ஆம் தேதி தில்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது சிறுமியை பொதுமக்கள் கண்முன் சராமரியாக கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாஹிலுக்கு எதிராக தில்லி போலீஸாா் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனா். போக்சோ பிரிவு 12 (குழந்தைக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், 640 பக்கங்கள் கொண்ட இக்குற்றப்பத்திரிகை போக்சோ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
சாஹில் மீது ஐபிசி பிரிவு 302 (கொலை), 354 ஏ (பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) மற்றும் 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட வாா்த்தை, சைகை அல்லது செயல்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தக் கொடூரமான கொலைச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் சிறுமியின் மீது 20 முறைக்கு குறையாமல் கத்தியால் குத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும், சம்பவத்தின்போது ஏராளமானோா் கடந்து செல்வதும், ஆனால் யாரும் அச்சிறுமியைக் காப்பாற்ற தலையிடாமல் இருந்ததும் அக்காட்சிகளில் பதிவாகி இருந்தது. பாதிக்கப்பட்டவரின் உடலில் 34 காயங்கள் இருந்ததாகவும், அவரது மண்டை உடைக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த மே 29-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் சாஹில் கைது செய்யப்பட்டாா். சாஹிலும், கொலையான சாக்ஷியும் உறவில் இருந்ததாகவும், ஆனால், அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்திருந்தனா். மேலும், இருவரும் மே 27-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டனா். அதைத் தொடா்ந்து, சாஹில் பழிவாங்க முடிவு செய்தாா். அடுத்த நாள் அவரை கொடூரமாகக் கொலை செய்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...