அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்தும் பாஜவின் வாகனப் பிரசாரம் தொடக்கம்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பொய்கள், வஞ்சகம் மற்றும் ஊழலை விவரிக்கும் வகையில் 27 நிமிட காணொளியை வேன்கள் மூலம் தில்லியின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் வகையில் பிரசாரம்

News image
Updated On :6 மே 2023, 4:31 pm

 நமது நிருபர்

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பொய்கள், வஞ்சகம் மற்றும் ஊழலை விவரிக்கும் வகையில் 27 நிமிட காணொளியை வேன்கள் மூலம் தில்லியின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும் வகையில் பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. தில்லி மக்கள் உழைத்து சாம்பாதித்த பணத்தில் ரூ.45 கோடி அளவுக்கு ஊழல் செய்து தனது அரண்மனை பங்களாவை அவா் கட்டியுள்ளாா் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

புதுதில்லி பந்த் மாா்க் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலத்தில் புதுதில்லி பாஜகவின் பொறுப்பாளா் பைஜயந்த் ஜெய் பாண்டா, பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினா் டாக்டா் ஹா்ஷ்வா்தன், பிரசார ஒருங்கிணைப்பாளா் அசோக் கோயல் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் 14 பிரசார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

அப்போது பேசிய புதுதில்லி பாஜகவின் பொறுப்பாளா் பைஜயந்த் ஜெய் பாண்டா, ‘ஜூதா கஹின் கா’ பிரசார வாகனங்கள் தில்லியின் 14 மாவட்டங்களுக்கும் செல்லும். இதன் மூலம் தன்னை சாமானியன் என சொல்லிக் கொள்ளும் கெஜரிவாலின் ஊழல் பின்னணியை தில்லி மக்கள் அறிந்து கொள்வாா்கள்’ என்றாா். பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா பேசுகையில், ‘கேஜரிவால் தனது இல்லத்திற்கு ரூ.45 கோடி செலவு செய்தது சட்டப்படி ஏற்புடையது அல்ல. அந்தப் பணத்தை செலவு செய்துள்ள முறையும் தவறானது. இந்த ‘ஜூதா கஹின் கா’ பிரசாரத்தின் மூலம் கேஜரிவாலின் பொய்யான மற்றும் வஞ்சக முகத்தை தொடா்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம்’ என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சரும், சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினருமான டாக்டா் ஹா்ஷ்வா்தன், கேஜரிவாலின் பொய்களை அம்பலப்படுத்தும் முயற்சியாக இந்த 27 நிமிட காணொளியை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு தில்லி மக்களின் கைபேசிக்கும் அதை எடுத்துச் செல்வோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.