ஒருவருக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை தங்கள் மனதிற்குப் பிடித்தவளாகவும், நல்ல நிறத்துடன் அழகாகவும், நல்ல குணமுடையவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பது வழக்கம். ஆனால், ஒருசில ஆண்கள் "அழகு இல்லை என்றாலும் நல்ல பெண் கிடைத்தால் போதும்" என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
முக்கியமாக, இப்போது பல ஆண்களின் திருமணம் எளிதாக நடைபெறாமல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இளமைக்காலத்தில் திருமணத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் "பத்து கட்டளைகள்" என்று வைத்து, தேவையில்லாமல் திருமணத்தைத் தள்ளிப்போடுவதுதான். அதன் காரணமாக வயது அதிகமான பிறகு நல்ல வரன் கிடைப்பது சிரமமாகி விடுகிறது.
இக்காலத்தில் பாரம்பரிய 10 பொருத்தங்களை விட 3 முக்கிய பொருத்தங்கள் போதுமானது என்று கருதி, திருமணத்தை நடத்த முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு ஜாதகக் கட்டத்திலும் ஏழாம் வீடு, லக்னம் மற்றும் அவற்றைப் பார்க்கும் சுப/அசுப கிரகங்களை வைத்து வரப்போகும் மணமகள் அல்லது மணமகனின் அழகு, நிறம், உடல்வாகு, குணம் மற்றும் குறை நிறைகள் பற்றியும் கூற முடியும். ஒரு ஆணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது நீச்சம் பெற்றிருக்கிறாரா, சுப அல்லது அசுப கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறாரா என்பதைப் பார்த்தால், வரப்போகும் மணமகளின் நிறம், அழகு, உடல்வாகு போன்றவற்றை அறிய முடியும். ஒரு ஆண் தன் வாழ்க்கைத்துணை அழகாகவும் நல்ல குணம் கொண்ட பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவது தவறு அல்ல.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பெண்ணின் அழகு மட்டுமல்லாமல், முகவசியம், கவர்ச்சி, மதம், மொழி மற்றும் அவள் எந்த திசையிலிருந்து வருகிறாள் என்பதையும் ஜாதகத்தை வைத்துக் கூற முடியும். ஒருவரின் அழகு, தோற்றத் தன்மை மற்றும் காந்த ஈர்ப்பை அறிய முக்கியமான கிரகங்களான சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பலத்தை கொண்டு பலன் கூறப்படுகிறது. சந்திரன் மனதை மட்டுமல்ல, முகத்தின் பிரகாசத்தையும் குறிக்கும் முக்கிய கிரகம். ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ஆம் வீடு (முக ஸ்தானம்) பலமாக இருந்தால், முகத்தில் மென்மை, அமைதி மற்றும் இயற்கையான ஒளி வெளிப்படும்.
குறிப்பாக சந்திரன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், அழகும் பிரகாசமும் அதிகரிக்கும். குருவின் சுப பார்வை கிடைத்தால் வெளிப்புற அழகுடன் நல்ல குணமும் சேரும். சுக்கிரன் கவர்ச்சி, கலை, காதல், அழகு மற்றும் ஸ்டைல் ஆகியவற்றின் அதிபதி. ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமாக அல்லது ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்றிருந்தால் இயற்கையான கவர்ச்சி இருக்கும். களத்திர ஸ்தானமான 7ம் வீட்டின் அதிபதி சுக்கிரன்/ சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தால் அழகான மனைவி கிடைப்பாள்.
சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை தாம்பத்திய ஈர்ப்பை அதிகரிக்கும். இப்படியான அமைப்பு இருந்தால், தம்பதியர் அன்யோன்யமாக நீண்ட காலம் அன்புடன் வாழ்வார்கள். சுக்கிரன் அமரும் இடம் சுபத்துவத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்ரன் நட்சத்திரங்களில் லக்கின சுபர் சுபத்துவத்துடன் இருப்பதும் அழகையும் கலை நயத்தையும் வலுப்படுத்தும். சுக்கிரன் - செவ்வாய் இணைவு என்பது காந்த ஈர்ப்பு கிரகங்கள். இது சுபக் கிரக பார்வையுடன் இருந்தால் மட்டுமே நல்ல பலன் தரும்; இல்லையெனில் தாம்பத்தியத்தில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஜோதிடத்தில் ஒருவரின் ஜாதகம் அவரது வெளிப்புற தோற்றத்தையும், குணத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். ஒரு பெண் தேய்பிறை சந்திரன் தொடர்பு பெற்றிருந்தால், அந்தப் பெண் மிகவும் ஒல்லியான உடல் அமைப்புடன் இருப்பாள். குரு பொதுவாகப் பருமனான உடல் அமைப்பைக் குறிக்கும் கிரகம். ஆகவே, ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, 7ம் வீட்டின் அதிபதியுடன் தொடர்பு பெற்றிருந்தால், வரப்போகும் மணமகள் சற்றுப் பருமனான உடல் அமைப்புடன் இருப்பார்.
ஒருவரின் உடல் அமைப்பை பெரும்பாலும் ராசி அல்லது லக்னத்தை வைத்து சுலபமாகக் கூற முடியும். அதோடு குரு, சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் போன்ற கிரகங்களின் தொடர்பு இருந்தால், ஒருவரின் நிறமும் உடல் அழகும் மேலும் மெருகூட்டும். அதே நேரத்தில் தோலின் நிறத்தில் முக்கிய பங்கு பெறுவது புதன். புதனோடு- சனி மற்றும் ராகு–கேது போன்ற கிரகங்கள் அசுப நிலையில் இருந்தால், அழகு மற்றும் நிறத்தில் சில குறைபாடுகள் காணப்படலாம்.
ஜோதிட நூல்களில் ஒன்றான ஜாதக அலங்காரம் நூலில், லக்னத்தில் கிரகங்கள் அமர்ந்திருந்தால் ஜாதகரின் உடல் பொலிவு, உருவ அமைப்பு மற்றும் அவருக்கு ஏற்படும் நோய்களின் தன்மை ஆகியவற்றைக் கூற முடியும் என்று விளக்கப்பட்டுள்ளது (ஜாதக அலங்காரம், 222-வது பாடல், பக்கம் 317). ஒவ்வொரு கிரகமும் லக்னத்தில் அமரும்போது அந்த ஜாதகரின் உருவம், அழகு, நடை, குணம் மற்றும் எந்த வகையான நோய்கள் ஏற்படும் என்பதையும் கூற முடியும்.
உதாரணமாக: சூரியன் நெருப்பு தத்துவம் கொண்ட கிரகம், அவர் லக்னத்தில் அமரும்போது ஜாதகரின் உடல் செந்நிறம் கொண்டதாக இருக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். மேலும் நீளமான உடல்வாகு கொண்டவராக இருப்பார்.
சந்திரன் லக்னத்தில் அமர்ந்தால்: மெலிந்த உடல் அமைப்பு கொண்டவராக இருப்பார். அறிவாளியாகவும், ஆழ்ந்த நீண்ட சுவாசம் உடையவன், இனிமையாகப் பேசுபவர், சுத்தம் விரும்புபவர் மற்றும் தேவையான நிலையான பெயர்களை பெற்றிருப்பான்.
செவ்வாய் லக்னத்தில் அமர்ந்தால்: உடலில் பித்தம் அதிகமாக இருக்கும். அவசர குணம், ஆத்திரம் உடையவர். பேசும் திறன் இருக்கும். சில சமயம் பெரிய வயிறு உடையவராகவும், உடல் சற்றே இளைத்திருக்கும். மற்றவர்களை எள்ளி நகையாடும் குணம், உறுதியில்லாத மனநிலை போன்றவை இருக்கும்.
புதன் லக்னத்தில் அமர்ந்தால்: எல்லோரிடமும் சிநேகமாகப் பழகுபவர். பிறர் விரும்புமாறு பேசக்கூடியவர். உடலில் சிறிய வியாதிகள் இருக்கலாம். புத்திசாலித்தனமாகவும் நயமாகவும் பேசுபவர்.
குரு லக்னத்தில் அமர்ந்தால்: செந்நிற மேனி, பருமனான உடல் அமைப்பு உடையவர். கபம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். அடர்ந்த தலைமுடி, உடலில் ரோமம் அதிகம் இருக்கும். மேல்நோக்கிய பார்வை உடையவராக இருப்பார்.
சுக்கிரன் லக்னத்தில் அமர்ந்தால்: பொலிவான மேனி கொண்டவர். சுகவாசத்தை விரும்புபவர். பித்தம் மற்றும் வாதம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். கருமையான சுருள் முடி மற்றும் உடலில் ரோமம் இருக்கும்.
சனி லக்னத்தில் அமர்ந்தால்: நீலநிறம் கலந்த கண்கள், இளைத்த நீளமான உடல் அமைப்பு. நடக்கும் போது கை-கால்களை அதிகமாக அசைத்து சற்று தடுமாறும் நடை கொண்டவராக இருப்பார்.
பொதுவாக ஜாதக கட்டத்தில் சனியின் தாக்கம் அதிகம் இருந்தால் ஒரு சில தம்பதியருக்கு உடலில் குறைபாடு, நோய் அல்லது குடும்பத்தில் அதிக பொறுப்புகள் இருக்கும். இதனாலே திருமணத்தில் தாமதம் ஏற்படும். அதேபோல், சனி 1, 2ம் பாவ தொடர்பு பெற்றிருந்தால் பெண் கருமை நிறம், மற்றும் உழைத்து சம்பாதிப்பவராக்க இருப்பார். அதே அந்த கிரகம் சரியில்லாமல் இருந்தால் மணப்பெண் சோம்பேறியாக இருப்பாள். குறிப்பாக லக்னத்தில் இருக்கும் சனி ஏழாம் வீட்டைப் பார்க்கும் போது, வரப்போகும் மணமகள் கருமை அல்லது மாநிறம் கொண்டவராகவும், சில சமயம் நீலமான கண் கொண்டவராகவும் இருக்கலாம்.
Summary
What does astrology say about the character of a future bride?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!
வீட்டுக் குறிப்புகள்...

நீரிழிவு உள்ளதா? கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?

சவால்களை சமாளிக்கும் மனவலிமை கொண்டவர் விருச்சிக ராசியினர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


