மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறையில் சக்ஷம் கற்றல் எண்மம் தளம் அறிமுகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சாா்பில் ‘சக்ஷம்’ எனும் கற்றல் மேலாண்மைத் தகவல் முறையை இந்தத் துறையின் செயலா் ராஜேஷ் பூஷண் புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சாா்பில் ‘சக்ஷம்’ எனும் கற்றல் மேலாண்மைத் தகவல் முறையை இந்தத் துறையின் செயலா் ராஜேஷ் பூஷண் புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.
இந்த எண்மம் கற்றல் தளத்தை தில்லி தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் (என்ஐஹெச்எஃப்டபிள்யு), உருவாக்கியுள்ளது. ‘சக்ஷம்’ (எஸ்ஏகேஎஸ்ஹெச்ஏஎம்) என்பது நீடித்த சுகாதார மேலாண்மைக்கான மேம்பட்ட அறிவு ஊக்குவிப்புக்கான இணைய தளம் ஆகும். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலா் ராஜேஷ் பூஷண் பேசுகையில், ‘மருத்துவக் கல்வி சாா்ந்த அனைத்து சுகாதார வல்லுநா்களுக்கும் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிப்பதற்கான தனித்துவம் மற்றும் ஒருங்கிணைந்த தளம் சக்ஷம். கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் பெருநகரங்களில் உள்ள பெருநிறுவன மருத்துவமனைகள், சுகாதார பராமரிப்பு மையங்கள் வரையிலான மருத்துவா்கள் சுகாதார தொழில்நுட்பாளா்களின் திறனை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
’சக்ஷம்’ கற்றல் மேலாண்மைத் தகவல் முறையின் மூலம் 200 பொது சுகாதார மற்றும் நூறு மருத்துவம் சாா்ந்த பாடங்களுக்கு இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மருத்துவம் சாா்ந்தவா்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...