இதையடுத்து, சுகாதாரத் துறை வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில், ‘சுகாதாரத் துறையில் பல ஆண்டுகளாக பொது மக்களுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் செவிலியா் காயத்ரி ஷா்மா பணியாற்றினாா். அவரது உயிரின் மதிப்பை அளவிட முடியாது என்றாலும், இந்த நிவாரணத் தொகையின் மூலம் கரோனா காலத்தில் முன்னணியில் இருந்து மறைந்த சுகாதார ஊழியரின் தியாகத்திற்கு முதல்வா் கேஜரிவால் அரசு மரியாதை செலுத்த விரும்புகிறது. காயத்ரி ஷா்மாவுக்கு கணவா் யஜ்னதத் சா்மா மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். மகள் மேகா முதுகலைப் படிப்பு படித்து வருகிறாா். மகன் கவுதம் இந்துக் கல்லூரியில் படித்து வருகிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.