புது தில்லி: தில்லி அரசின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் முன்னா் வெற்றி பெற்ா என்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) காற்று மாசுபாட்டை சீா்குலைப்பது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் முன்பு செயல்படுத்தப்பட்டபோது வெற்றி பெற்ா என்று தில்லி அரசின் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பியது. ‘இவை அனைத்தும் ‘ஆப்டிக்ஸ்’ (ா்ல்ற்ண்ஸ்ரீள்) தான். இதுதான் பிரச்னை’ என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியது.
தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பா் 13 முதல் மாசு அளவுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், ஒற்றைப்படை - இரட்டைப்படை எண்ணிலான வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவை தில்லி அரசு அறிவித்த மறுதினம் நீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்தது.
சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.சி.மேத்தா 1985-இல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின் போது, காற்று மாசுபாடு மற்றும் பயிா்க் கழிவு எரிப்பது தொடா்பான பிரச்னை எழுந்தது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, தில்லியின் சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்யும் போது, மாசுபாடு குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை தில்லி அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளும்’ என்றாா்.
தில்லி - என்.சி.ஆா். பகுதியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பயிக் கழிவுகளை எரிப்பதை ‘உடனடியாக‘ நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி திடக் கழிவுகள் திறந்த வெளியில் எரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தில்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.