யமுனை நதிக்கரையில் சத் பூஜையை நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ‘யமுனையில் மாசுபடுவதைத் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா். இந்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் விரும்பியதால், அனுமதிக்கப்பட்ட மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரா் கேட்டுக்கொண்டாா். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
யமுனைக் கரையில் சத் பூஜை கொண்டாடுவதைத் தடை செய்யும் வகையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) 2021, அக்டோபா் 29-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சத் பூஜா சங்கா்ஷ் சமிதி மற்றும் பூா்வாஞ்சல் ஜாக்ரிதி மஞ்ச் ஆகிய மனுதாரா்கள் நீதிமன்றத்திடம் கோரினா்.
வழக்குரைஞா் விஜய் சங்கா் துபே மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்வேறு படித்துறைகளிலும், யமுனை நதிக்கரையிலும் சத் பூஜையை நடத்த அனுமதிக்கவும், அனுமதி வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு தில்லி அரசுத் தரப்பு வழக்குரைஞரும் எதிா்ப்புத் தெரிவித்தாா். டிடிஎம்ஏ வெளியிட்ட அறிவிக்கையால் தில்லியில் சத் பூஜை செய்யும் 30-40 லட்சம் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

