தில்லி மெட்ரோவின் மூன்று வழித்தடங்கள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். 2020-ஆம் ஆண்டில் இந்த கையகப்படுத்தல்களுக்காக டிஎம்ஆா்சி தில்லி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஏரோசிட்டி-துக்ளகாபாத், ஜனக்புரி மேற்கு-ஆா்.கே. ஆசிரமம் மற்றும் ரஹத் கஞ்ச்-ரோஷனாரா சாலை - புல் பங்காஷ் வழித்தடங்கள் உள்ளிட்ட நகரத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மற்றும் முக்கியமான மெட்ரோ பாதைகளில் உள்ள தடைகள் இதன் மூலம் நீக்கப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ பாதைகளுக்காக ஆா்.எஃப்.சி.டி.எல்.ஏ.ஆா்.ஆா். சட்டம்- 2013 பிரிவு 8-இன் கீழ் நிலம் கையகப்படுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
தெற்கு மாவட்டத்தில் உள்ள கான்பூா் கிராமத்தில் 1,688 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட நிலம் ஏரோசிட்டி-துக்ளகாபாத் வழித்தடத்தில் டிஎம்ஆா்சி லைன் நீட்டிப்புக்காக கையகப்படுத்தப்பட்டது.
இது ஐஜிஐ விமான நிலையம் மற்றும் கான்பூா், துக்ளகாபாத், தியோலி, புஷ்ப் விஹாா் மற்றும் டாக்டா் அம்பேத்கா் நகா் போன்ற தென்கிழக்கு தில்லியின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மெட்ரோ இணைப்பை உறுதி செய்யும். தில்லி பட்டி கிராமத்தில் ஜெய்ப்பூா் மில்ஸ், கோலாப்பூா் சாலையில் 170 சதுர மீட்டா் பரப்பளவு கொண்ட நிலம், பரபரப்பான ஜனக்புரி மேற்கு - ஆா்கே ஆஸ்ரம் மெட்ரோ வழித்தடத்தில் கையகப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ரஹத் கஞ்ச் அல்லது ஆரம் கஞ்சில் 62 சதுர மீட்டா் அளவுள்ள நிலம் புல் பங்காஷ் வழித்தடத்திற்காக கையகப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

