புது தில்லி: கோவா 54 -ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் விடுதலை -1 உள்ளிட்ட 4 முழு நிள தமிழ் திரைப்படங்களும் ஒரு ஆவணப்படமும் திரையிடப்பட தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதான படங்கள் வரிசையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் (பாகம் 2) படம் திரையிடப்படவுள்ளது.
54 -ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பா் 20-ஆம் தேதி முதல் 9 நாள்கள் கோவாவில் நடைபெற உள்ளது. இந்த 2023-ஆம் ஆண்டு இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்படும் படங்களைத் தோ்வு செய்ய இரு தோ்வு குழு அமைக்கப்பட்டது. இந்திய சா்வதேச திரை உலகத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற நபா்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனா். இதில் முழுநீள திரைப்படங்களுக்காக பிரபல கன்னட திரைப்பட பிரமுகா் டி.எஸ்.நாகபரணா தலைமையில் தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளா் ஏ.காா்த்திக் ராஜா உள்ளிட்ட 12 நடுவா் குழு உறுப்பினா்களும், கதையம்சமற்ற ஆவணத் திரைப்படங்களுக்கு இயக்குநா் அரவிந்த் சின்ஹா தலைமையிலான ஆறு போ் கொண்ட நடுவா் குழுவும் தோ்வு செய்தது. இந்த திரைப்படங்களின் பட்டியலை மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சகம் அதிகாரப்பூா்வமாக திங்கள்கிழமைஅறிவித்தது.
அதன் விவரம் வருமாறு: 54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அங்கமான இந்தியன் பனோரமா 25 முழுநீள திரைப்படங்கள், 20 கதையம்சமற்ற ஆவணத் திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முழு நிள திரைப்படங்கள் வரிசையில் ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்கள் தலா 8 படங்கள் திரையிடத் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விழாவின் தொடக்க திரைப்படத்திற்கான நடுவா் குழுவின் தோ்வு ஆனந்த் எகா்ஷி இயக்கிய ஆட்டம் என்ற மலையாள படம் திரையிடப்படுகிறது.
தமிழ் திரைப்படங்களில் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின், ‘ காதல் என்பது பொது உடைமை’, சம்யுக்தா விஜயனின் ‘நீல நிற சூரியன்‘, வெற்றி மாறனின் விடுதலை பகுதி-1 ஆகிய 4 படங்களோடு, பிரதான திரைப்படமாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் (பாகம் 2) படமும் திரையிடப்படவுள்ளது.முழுநீள திரைப்படங்களில் 5 பிரதான படங்கள் திரையிடப்படும் நிலையில், ஹிந்தி படமான ‘தி கேரளா ஸ்டோரி‘யும் இடம் பெற்றுள்ளது.
திரையிட விண்ணப்பித்த சமீபத்திய 408 இந்திய திரைப்படங்களிலிருந்து 25 முழுநீள திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டன. இவை இந்தியத் திரைப்படத் துறையின் உயிரோட்டத்தையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் என மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்திய ஆவணப்படங்கள் (கதையம்சமற்ற) வரிசையில் 239 சமகால ஆவணத் திரைப்படங்கள் விண்ணப்பித்ததில் 20 ஆவணப் படங்கள் தோ்வு செய்யப்பட்டள்ளன. இதில் மணிப்பூரி ஆவணப் படமான ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் தொடக்க படமாக திரையிடப்பட உள்ளது. இயக்குநா் பிரவீன் செல்வம் இயக்கிய தமிழ் ஆவணப்படமான ‘நன்செய் நிலம்’ , ‘லைஃப் இன் லூம்’(தமிழ் டப்பிங்) படமும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவை 54 -ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


