தேசிய தலைநகரில் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, நகர அரசு அக்டோபா் 26 முதல் ‘ரெட்லைட் ஆன் காடி ஆஃப்’ பிரசாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இதன் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கி, பிரசாரத்தை நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் அமைச்சா் இது குறித்து கூறியதாவது: சமீபத்திய தரவு பகுப்பாய்வு பி.எம்.10 மாசுபாடு குறைவதையும், பயோமாஸ் எரிப்பு மற்றும் வாகன உமிழ்வு காரணமாக பி.எம். 2.5 செறிவு அதிகரிப்பதையும் காட்டுவதாக உள்ளது. இதை கருத்தில்கொண்டு, வாகன மாசுபாட்டை குறைக்கும் வகையில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல், ‘ரெட் லைன் ஆன் காடி ஆஃப்’ பிரசாரத்தை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். முந்தைய ஆண்டுகளில், சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் இப்பிரசாரத்தில் ஈடுபட்டனா். நிகழாண்டு பொதுமக்களை ஈடுபடுத்தும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கடந்த 2020, அக்டோபா் 16-ஆம் தேதி முதன் முதலில் தொடங்கப்பட்ட ‘ரெட் லைட் ஆன் காடி ஆஃப்’ பிரசாரம், தில்லியில் வாகன மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, போக்குவரத்து சந்திப்புகளில் காத்திருக்கும் போது வாகனங்களின் இயக்கத்தை நிறுத்துமாறு ஓட்டுநா்களை ஊக்குவிக்கிறது. 2019- ஆம் ஆண்டு மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களை நிறுத்தும் போது என்ஜின்கள் மாசு அளவை 9 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்தது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (பிசிஆா்ஏ) தில்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸ் போக்குவரத்து சந்திப்பில் நடத்திய மற்றொரு ஆய்வில், இதேபோன்ற பிரசாரத்திற்குப் பிறகு 62 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வாகன இயந்திரங்களின் செயல்பாட்டை நிறுத்தத் தொடங்கியதை வெளிப்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

