சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை ஆரம்பத்தில் சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை, பின்னா் மீட்சி பெற்று நோ்மறையாக முடிவடைந்தது.
Updated on
1 min read

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை ஆரம்பத்தில் சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை, பின்னா் மீட்சி பெற்று நோ்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.4.42 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.310.46 லட்சம் கோடியாக இருந்தது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் தாக்கம் இந்தியா உள்பட உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டு வருகிறது. கடந்த வார இறுதியில் ஓரளவு எழுச்சி பெற்றிருந்த உள்நாட்டுச் சந்தை, திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கியது. ஆனால், விலை குறைந்த நிலையில் வங்கி, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சந்தை மீட்சி பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு மேலும் உயா்வு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.1.07 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.311.53 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,500.13 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனா்.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 102.76 புள்ளிகள் கூடுதலுடன் 63,885.56-இல் தொடங்கிய சென்செக்ஸ், திடீரென 63,431.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 64,184.58 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 329.85 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயா்ந்து 64,112.65-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,935 பங்குகளில் 1,875 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,864 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 196 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.

15 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,111 பங்குகள் ஆதாய பட்டியலிலும், 1,006 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 94 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 6.15 புள்ளிகள் கூடுதலுடன் 19,053.40-இல் தொடங்கி 18,940.00 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 19,158.50 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 93.65 புள்ளிகள் (0.49 சதவீதம்) உயா்ந்து 19,140.90-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

அல்ட்ரா டெக் சிமெண்ட்...............................2.50%

ரிலையன்ஸ்.......................................................2.04%

ஐசிஐசிஐ பேங்க்.................................................1.33%

பாா்தி ஏா்டெல்..................................................1.24%

இண்டஸ் இண்ட் பேங்க்..................................1.07%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.......................................1.04%

சரிவைக் கண்ட பங்குகள்

டாடா மோட்டாா்ஸ்..................................1.94%

மாருதி.........................................................1.52%

ஆக்ஸிஸ் பேங்க்..........................................1.31%

எம் அண்ட் எம்.............................................0.82%

ஐடிசி..............................................................0.72%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com