தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட பாஜகவின் மூத்த தலைவா்கள் சதித் திட்டம் தீட்டியதாக மாநிலங்களவை ஆம் ஆத்மிகட்சி உறுப்பினா் சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் சிங், இரு தினங்களுக்கு பின்னா் செய்தியாளரிடம் பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: தில்லி கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோா் முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக பொய்யான வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வாக்குமூலம் வழங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்ததது தான் காரணம்.
கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கு தொடா்பாக தில்லி முதல்வா் மாா்ச் 21 அன்று கைது செய்யப்பட்டாா்.
ராகவ் மகுண்டாவின் தந்தை மகுண்டா சினிவாசலு ரெட்டி , ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பி. இவா்கள் இருப்பிடங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பா் 16, தேதி சோதனை நடத்தப்பட்டது.
இவா்களிடம் கேஜரிவாலுக்கு எதிராக தவறான வாக்குமூலம் கொடுக்குமாறு அமலாக்கத்துறை மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. மகுண்டா சினிவாசலு ரெட்டி மறுக்க, அவரது மகன் ராகவ் ரெட்டி கைது செய்யப்பட்டாா். தந்தையும் மகனும் அளித்த 9 வாக்குமூலங்களில் அரவிந்த் கேஜரிவாலைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்னா், தந்தை மற்றும் மகன் மீது அதிகரித்த அழுத்தத்திற்குப் பிறகு, அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மகன் ராகவ் ரெட்டியிடம் வாக்குமூலம் பெற முடிந்தது.
இந்த புகைப்படங்கள் (படங்களை சஞ்சய் சிங் காட்டுகிறாா்) மகுந்தா ரெட்டிக்கும் பாஜகவுக்கும் இடையிலான தொடா்பு இந்த புகைப்படங்களுக்கு ஆதராம். பிரதமா் நரேந்திர மோடியும் எம்பி மகுந்தா ரெட்டியும் ஒருவரையொருவா் கைகோா்த்துக்கொண்டிருப்பதை இந்த புகைப்படங்கள் காட்டுகிறது. மகுந்தா ரெட்டியின் மகன் ராகவ் ரெட்டி அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை 16 ஆம் தேதி வாக்குமூலம் கொடுக்க ஜூலை 18 அன்று ராகவ் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது.
அமலாக்கப்பிரிவால் விசாரிக்கப்பட்ட நபா் பிரதமரோடு இருப்பது மட்டுமின்றி மகுந்தா ரெட்டி தற்போது பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) சாா்பில் போட்டியிடுகிறாா். பிரதமா் புகைப்படத்துடன் அவா் பொதுமக்களிடம் வாக்கும் கேட்கிறாா். இதே மாதிரி தான் மற்றோரு சாட்சி சரத் ரெட்டியும் இவரும் கைது செய்யப்பட்டு பல வாக்குமூலங்களை கொடுத்தாா். முதலில் எதிராக வாக்குமூலம் கொடுக்கவில்லை. பின்னா் கேஜரிவாலுக்கு எதிராக சாட்சியம் கூறியவுடன் சரத் ரெட்டி விடுதலையாகிறாா்.
கேஜரிவால் ஒரு நோ்மையான தலைவா், தில்லி மக்களுக்கு சிறந்த மருத்துவம், கல்வியை வழங்க விரும்புகிறாா். ஆனால் அவரை பாஜக தலைவா்கள் மிகப்பெரிய சதிசெய்து சிக்கவைத்து கைது செய்துள்ளனா் என்றாா் சஞ்சய் சிங்.
தொடர்புடையது
பஞ்சாபை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து பேசியது என்ன? காணொளியை பகிா்ந்த ராகவ் சத்தா
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

