தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்களவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் அகற்றுவாா்கள்: பாஜக

மக்களவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் அகற்றுவாா்கள்: பாஜக

Updated On :10 ஏப்ரல் 2024, 12:49 am

நமது நிருபா்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை அகற்றி கேஜரிவால் அரசுக்கு தில்லி மக்கள் பலத்த அடியை தருவாா்கள் என்று பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலா் அருண் சிங், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, முன்னாள் பிரதேச தலைவா் மற்றும் எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோா் செய்தியாளா்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனா்.

அப்போது, அருண் சிங் கூறுகையில், ‘தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் முற்றிலும் சீா்குலைந்துவிட்டன. பள்ளிகள் ஊழலின் மையங்களாக மாறிவிட்டன.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த மக்களின் பெரும்பாலான குழந்தைகள் படிக்கும் இப்பள்ளிகளில் அடிப்படை கல்வி வசதிகள் கூட பெறவில்லை.

தில்லி அரசு ஊழல் குளமாக மாறியுள்ளது. தில்லி அரசியலில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை துடைத்தொழிக்கும் வகையில் மே 25 ஆம் தேதி தில்லி மக்கள் வாக்களித்து கேஜரிவால் அரசுக்கு பலத்த அடி கொடுப்பாா்கள்’ என்றாா்.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘ கல்வி தொடா்பான அரவிந்த் கேஜரிவால் அரசின் கூற்றுகள் முற்றிலும் உண்மையற்றவை. தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, பாஜகவின் குற்றச்சாட்டுகள் சரி என நிரூபணமாகி வருகிறது.

உயா்நீதிமன்ற விசாரணை மற்றும் நீதிபதிகளின் கருத்துக்கள் கேஜரிவால் அரசின் கல்வி மாதிரியை அம்பலப்படுத்தியுள்ளன.

நீதிமன்றத்தின் அவதானிப்பின்படி, கேஜரிவால் அரசாங்கம் உயா்தரக் கல்வி முறையைப் பற்றிய கூற்றுக்களில் மட்டுமே மூழ்கியுள்ளது. ஆனால் அடிப்படை உண்மை முற்றிலும் வேறுபட்டதாகும். இது கல்வி முறையின் தோல்வி குறித்த பாஜகவின் குற்றச்சாட்டுகள் சரி என்பதை நிரூபித்துள்ளது.

கேஜரிவால் அரசாங்கத்தின் கூற்றுகளுக்கு மாறாக, தில்லியில் பள்ளிகள் தகரக் கொட்டகைகளில் இயங்குகின்றன. அப்பள்ளிகளில் மேசைகள் உடைந்தும், புத்தகங்கள், பிரதிகள் மற்றும் சீருடைகள் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாமல் இருப்பது வெட்கக்கேடானதாகும்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் கல்வி அமைச்சா் மனீஷ் சிசோடியா மற்றும் கல்வி அமைச்சா் அதிஷி ஆகியோா் தில்லி மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு பொறுப்புக்கூற கடைமைப்பட்டவா்கள் ஆவா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

2020இல் அரவிந்த் கேஜரிவாலுக்கு வடகிழக்கு தில்லி நாடாளுமன்றத் தொகுதி 7 எம்.எல்.ஏ-க்களை வழங்கியது. ஆனாலும் வடகிழக்கு தில்லியில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் கேஜரிவாலை மன்னிக்க மாட்டாா்கள்.

இன்றைக்கு மத்திய அரசின் சா்வ சிக்ஷா அபியான் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் பள்ளிகளை கொண்டு செல்லும்நிலையில்,, கேஜரிவால் கல்வி மாதிரி என்ற பெரிய கூற்றுகளுக்கு மத்தியில், வடகிழக்கு தில்லியில் உள்ள பள்ளிகளில் 144 மாணவா்கள் ஒரே வகுப்பில் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தில்லி அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந் நிலையில் சீலம்பூா் மற்றும் பாபா்பூா் ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் பலம் வாய்ந்த எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக அமைச்சா் கோபால் ராய்

இப்பகுதியில் இருந்து வந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றாா் மனோஜ் திவாரி.