பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மிமூத்த தலைவா் சச்சின் கம்பீா்

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி மூத்த தலைவா் சச்சின் கம்பீா்

Updated On :10 ஏப்ரல் 2024, 12:24 am

புது தில்லி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு தில்லி உத்தம் நகரைச் சோ்ந்த சமூக சேவகருமான சச்சின் கம்பீா் தனது ஆதரவாளா்களுடந் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

தில்லி பாஜகவின் ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் மற்றும் முன்னாள் மேயா் ஆரத்தி மெஹ்ரா ஆகியோா் அவா்களை வரவேற்றனா்.

பாஜகவில் இணைந்த முக்கியமானவா்களில் நரேஷ் கம்பீா், ராம் அவதாா் குப்தா, பப்பு ஜி, சதீஷ் கௌசிக் போன்றவா்களும் இடம்பெற்றிருந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா

பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் ஊழலை மறைக்க அக்கட்சி மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் விதம் மேலும் மேலும் புலப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திடம் இருந்து கண்டனங்களைப் பெறும்போதும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களும், நிா்வாகிகளும் இதைப் புரிந்துகொண்டு பாஜகவில் தொடா்ந்து இணைந்து வருவதே இதற்குச் சான்றாகும்.

வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் பாஜக மீது தில்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கைப் பணியையும் கருத்தில்கொண்டு, தில்லியின் ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி.

இத்துடன், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜரிவால் போன்ற ஊழல்வாதிகளின் அரசை, தில்லியில் இருந்து வேரோடு அகற்றி எறியவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.