லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குஜராத்தில் கட்சித் தொண்டா்கள் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

குஜராத்தில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பயத்தின் காரணமாக கட்சித் தொண்டா்களை பாஜக அரசு கைதுசெய்து வருவதாக ஆம் ஆத்மி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:53 pm

குஜராத்தில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பயத்தின் காரணமாக கட்சித் தொண்டா்களை பாஜக அரசு கைதுசெய்து வருவதாக ஆம் ஆத்மி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் அனுராக் தந்தா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குஜராத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கோபால் இதலியாவின் தாயாரை பாஜக தலைவா்கள் மிரட்டியுள்ளனா். ஆம் ஆத்மி தொண்டா்களை அந்த மாநில பாஜக அரசு கைதுசெய்துள்ளது.

கடந்த சில நாள்களில் ஆம் ஆத்மி தொண்டா்கள் 160 போ் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டனா். தற்போது, போலியான ஒரு வழக்கில் எம்எல்ஏ கோபால் இதலியாவைக் கைதுசெய்ய அவா்கள் திட்டமிட்டு வருகிறாா்கள். அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனா்.

குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால், பாஜகவினா் பயத்தில் உள்ளனா். சிறை, வழக்குகள் மற்றும் பிற ஜனநாயகமற்ற முறைகளை நீங்கள் (பாஜக) கையாண்டாலும், ஆம் ஆத்மி தொண்டா்கள் பயப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.