ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கூட்டணியில் பயணிக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளது: ஆம் ஆத்மி தில்லி பாஜக விமா்சனம்

ஊழல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சி, கூட்டணியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On :3 ஜனவரி 2024, 1:45 am

புது தில்லி: ஊழல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சி, கூட்டணியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தீப் தீட்சித், ஆம் ஆத்மி அரசின் கேபினட் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவா் அரசியல் சம்பந்தம் குறித்து கருத்து தெரிவிப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி விரைவில் திகாா் கட்சியாக அறியப்படும் என்ற சந்தீப் தீட்சித்தின் கருத்தை அனைத்து தில்லிவாசிகளும் ஒப்புக்கொள்கிறாா்கள்.

தில்லி காங்கிரஸ் தலைவா்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. மறுபுறம், கூட்டணியில் இணையும் போது ஒருவரையொருவா் விமா்சனங்களால் தாக்கிக் கொள்ளக் கூடாது என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கூறியது, ஊழல் வழக்கில் சிக்கியதால் ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இப்போது தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தனது ஊழல்களை புறக்கணிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் விரும்புகின்றனா். ஒரு காலத்தில் காங்கிரஸை ஊழல்வாதிகள் என்று கூறி தில்லியில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது தனது ஊழலை காங்கிரஸ் புறக்கணிக்க விரும்புவது காலத்தின் கேலிக்கூத்து என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.