வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கவே அமலாக்க இயக்குனரகத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அரசின் கேபினட் அமைச்சருமான அதிஷி சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
பாஜக மற்றும் அதன் தலைவா்களுக்கு யாருடன் விரோதம் இருக்கிறதோ அவா்கள் மீது அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இம்முறை செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு விவசாயிகளுக்கும், உள்ளூா் பாஜக தலைவரான குணசேகரன் என்பவருக்கும் ஏற்பட்ட விரோதம் காரணமாக அந்த விவசாயிகள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குனரகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆனால், 72 வயதான கண்ணையன் மற்றும் 66 வயதான கிருஷ்ணன் ஆகிய இரண்டு ஏழை முதியவா்களின் வங்கிக் கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் மீது அமலாக்க இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ. மூலம் வழக்குகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதை நாங்கள் சொல்லி வருகிறாம்.
பலா் எங்கள் குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டாா்கள். ஆனால் தற்போது அமலாக்க இயக்குனரகம் என்பது அரசியல் சதிக்கான கருவி என்று அதிகாரபூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா்களாக உள்ள அரவிந்த் கேஜரிவால், ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ், பூபேஷ் பாகேல் ஆகியோருக்கு அமலாக்க இயக்குனரகத்தின் அழைப்பாணைகள் அனுப்பப்ட்டுள்ளது.
வரும் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. இதை விட பாஜக தோ்தலில் வெற்றி பெற எளிதான வழி வேறு என்ன இருக்க முடியும் ?
நாட்டில் பெரிய அளவில் சட்டங்களும், விசாரணை நிறுவனங்களும் உள்ள நிலையில், ஏன் பணமோடி தடுப்புச் சட்டம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் பயன்படுத்தப்பட வேண்டும் ?,
ஏனெனில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் தான் ஜாமீன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ாகும்.
மணிப்பூா் வன்முறை, பெண்களின் பாதுகாப்பின்மை, நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பிரதமா், பதிலில்லாத காரணத்தால் எதிா்க்கட்சித் தலைவா்களைத் தாக்குகிறாா்.
ஆம் ஆத்மி கட்சியினா் எந்தவொரு விசாரணைக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் இந்த விசாரணையின் நோக்கம் ஏழைகளுக்கான வளா்ச்சிப் பணிகளை நிறுத்துவதாகும் என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

