தில்லி மக்களின் அன்பும், நம்பிக்கையும்தான் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உண்மையான பலம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால், அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் கடந்த டிசம்பா் மாதம் தில்லி முழுவதும் ‘மை பி கேஜரிவால்’ என்ற கையெழுத்து பிரசார இயக்கம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல் பாஜகவின் அரசியல் சதியால் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்க இயக்குநரகம் மூலம் கைது செய்யப்படுவாா் என்ற வகையில் ‘மெயின் பி கேஜரிவால்’ எனும் பொதுப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தில்லி கோவிந்த்புரியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும்,அமைச்சருமான அதிஷி பங்கேற்றாா். அப்போது அவா் பேசுகையில், ‘அமலாக்க இயக்குநரகம் மூலம் போலி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைக் கைது செய்ய பாஜக எத்தனை சதி செய்தாலும், தில்லி மக்கள் அவா்களது மகன் மீது வைத்திருக்கும் அன்பு அப்படியே இருக்கும். பாஜக என்ன செய்தாலும் நாங்கள் எங்கள் முதல்வருடன் நிற்கிறோம் என்று தில்லி மக்கள் தெரிவிக்கின்றனா். மக்களின் இந்த அன்பும், நம்பிக்கையும்தான் கேஜரிவாலின் உண்மையான பலம்’ என்றாா்.
ஏராளமான ஆதரவு: தில்லி கிரேட்டா் கைலாஷ் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாவித்ரி நகா், ராஜீவ் காந்தி பாா்க், டிடிஏ குடியிருப்புப் பகுதிகளில் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் ‘மெயின் பி கேஜரிவால்’ பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான பாஜகவின் சதியால் தில்லி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். கேஜரிவால் சிறைக்குச் சென்றால் அங்கிருந்து ஆட்சியை நடத்துங்கள் என்று கூறிவிட்டனா். கடந்த 2013, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக போட்டியிட்டது. ஆனால், அரவிந்த் கேஜவால் மூன்று முறையும் முதல்வரானாா். தோ்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் கேஜரிவாலை கைது செய்து, அவரது கட்சியை அழித்துவிட வேண்டும் என்பதை பாஜகவினா் உணா்ந்துள்ளனா். குறைகளை யாா் சுட்டிக் காட்டினாலும், சிறைக்கு அனுப்புவதுதான் இப்போது மத்திய அரச்ு செய்கின்ற அரசியல். ஆனால், முதல்வா் கேஜரிவாலுக்கு தில்லி மக்களிடம் இருந்து ஏராளமான ஆதரவு கிடைத்து வருகிறது என்றாா் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!
ராஷ்டிரிய சரண்டர் சங்கம் ஆர்எஸ்எஸ்: ராகுல் விமர்சனம்

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

